Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 21 நவம்பர், 2019

ஆப்கானில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க இராணுவ வீரர்கள் பலி


 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


 ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அல்குவைதா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அல்கொய்தா, தலிபான் பயங்கரவாதிகளை அமெரிக்கா வேட்டையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி உள்ள தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்க இராணுவபடைகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் சுமார் 13 ஆயிரம் அமெரிக்க இராணுவ படையினர் முகாமிட்டுள்ளனர். இவர்கள் மீது தலிபான்கள் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஹெலிகொப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு இராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். இதை அமெரிக்க ராணுவம் உறுதி செய்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஆப்கானிஸ்தானில் எந்த இடத்தில் ஹலிகொப்டர் விபத்துக்குளானது? இறந்த ராணுவ வீரர்கள் யார்-யார்? என்ற விவரங்களை ராணுவ அதிகாரிகள் வெளியிடவில்லை. இதற்கிடையே அமெரிக்க ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
சார்க் மாவட்டத்தில் உள்ள லோகார் பகுதியில் ஹெலிகாப்டரை அதிகாலை 1 மணிக்கு சுட்டு வீழ்த்தியதாக தலிபான்கள் கூறி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக