இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கூகுளின்
கேமரா செயலியின் மூலம் ஹக்கர்கள் உங்களை நோட்டமிடுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல்
வெளியாகியுள்ளது .
செக்மார்க்ஸின்
ஆராச்சியாளர்கள் கூகுளை கேமரா செயலியில் ஒரு பிழை இருப்பதை
கண்டுபிடித்துள்ளனர்.அதன் மூலம் ஹக்கர்கள் நம் தொலைபேசியில் உள்ள
கேமராவின் மூலம் நம்முடைய புகைப்படம் ,வீடியோ நாம் எங்கு இருக்கிறோம் , என்ன
செய்கிறோம் என்ற செயல்களை செய்ய முடியும் ,அதுவும் நம் தொலைபேசியை லாக் செய்து வைத்திருந்தாலும்
இதை சுலபமாக செய்ய முடியும் என்று செக்மார்க்ஸின் ஆராச்சியாளர்கள்
எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த
குறைபாடானது கூகுளின் Pixel 2XL மற்றும் Pixel 3 கைப்பேசிகளில்
கண்டறியப்பட்டதாகவும் இதன் தாக்கம் Samsung தொலைபேசிக்கும் பரவியுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது .இதனால் ஆண்ட்ராய்டு பயனர்கள் கலக்கத்தில் உள்ளனர் .
அதன் ஆபத்துகள் இதோ:
- உங்கள் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி உங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முடியும் அதை ஹக்கர்கள் அவர்களது சர்வரில் சேமிக்க முடியும்.
- உங்கள் ஸ்மார்ட் போனில் முன்பக்க கேமராவுக்கு அருகில் உள்ள சென்சார் உங்களுக்கு அழைப்பு வரும்பொழுது உங்கள் காதுக்கு அருகில் கொண்டு செல்லும் போதும் இயங்கும் அதன் மூலம் நீங்கள் பேசும் அழைப்புகளை ரெகார்ட் செய்ய முடியும்.
- அப்படி அழைப்புகளை நோட்டமிடும் பொழுதே அதை விடியோவாக பதிவு செய்ய முடியும்
- நீங்கள் எடுக்கும் புகைப்படத்தின் மூலம் நீங்கள் எங்கு எங்கு செல்கிறீர்கள் என்று கண்காணிக்க முடியும் .
- உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ள அனைத்து விதமான பதிவுகளையும் அவர்களால் நகல் எடுக்க முடியும் .
- உங்கள் தொலைபேசியின் மூலம் எடுக்கும் புகைப்படம் ,வீடியோ என செய்யப்படும் அணைத்து செயல்களும் உங்கள் ஸ்மார்ட் போன் லாக் செய்து இருந்தாலும் அதை திறக்காமல் நிகழ்த்தப்படும்.
- மேற்குறிப்பிட்ட செயல்கள் நடப்பது எதுவுமே உங்களுக்கு எவ்வித சந்தேகமோ , எச்சரிக்கையா இல்லாமல் நடக்கும் .
சமீபத்தில்
தான் வாட்ஸ் அப் மூலமாக இஸ்ரேலை சேர்ந்த உளவு நிறுவனம் நிகழ்த்திய தொழிநுட்ப
தாக்குதல் மூலம் இந்தியாவை சேர்ந்த சில பத்திரிக்கியாளர்கள் ,சமூக ஆர்வலர்கள் ஏன்
மம்தா பானர்ஜி,பிரியங்கா காந்தி உட்பட பலர் தங்கள் தொலைபேசிகள் நோட்டமிடப்பட்டதாக
தெரிவித்தனர்.இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இது
தனிமனிதரின் சுதந்திரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக