Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 7 நவம்பர், 2019

மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு...

 Image result for மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு...

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



மாருதி சுசுகி ஆல்டோ கே10 மாடல் காரை காளை மாடு ஒன்று தாக்கியுள்ளது பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காளை, காரை முட்டி தூக்கி வீசியுள்ள இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
படத்தில் காட்டப்பட்டுள்ளதுபோல், டயர்-2 மற்றும் டயர்-3யை நோக்கியுள்ள மக்களின் பக்கம் காளை ஆல்டோ கே10 காரை தூக்கி வீசியுள்ளது. பொதுவாக மாடுகள் இதுபோன்று வாகனங்களை சேதப்படுத்துவது கிடையாது. ஆனால் சில நேரங்களில் மிருகங்கள் தங்களது கோபங்களை இவ்வாறு வெளிப்படுத்தி விடுகின்றன.
மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க
சமீபத்தில் கூட கேரளாவில் இதுபோல தான் யானை ஒன்று மதம் பிடித்து அருகில் இருந்த ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் சில மோட்டார்சைக்கிள்களை பந்தாடியது. அதுபோல தான் இதுவும். என்ன இங்கு காளை மக்கள் அதிகம் கூடும் பகுதியில் இவ்வாறு அட்டகாசம் செய்துள்ளது.
 மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க
காளையின் வலிமையை வெளிக்காட்டும் விதமாக 'கர்நாடகாவில் எடிட்டிங் இல்லாத பாகுபலி வெர்சன்' என்கிற ஹாஸ்டேக்குடன் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை மட்டுமே 1,700க்கும் அதிகமானோர் பகிர்ந்துள்ளனர்.
 மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க
பாதிப்பிற்குள்ளாகி உள்ள இந்த ஆல்டோ கே10 காரில் விலை கொடுத்து வாங்கிய பின்னர் பாதுகாப்பிற்காக பின்புறத்தில் பம்பர் புதியதாக பொருத்தியுள்ளனர். ஆனால் இந்த பம்பர் தான் காரை தூக்கி போட காளைக்கு உதவியாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த பம்பரில் தனது கொம்புகளை நங்கூரம் போல் மாட்டி கொண்டு காளை தூக்கியதில் காரின் முன்புறத்தின் ஒரு பக்க ஹெட்லைட் மற்றும் அதை சுற்றியுள்ள மொத்த பாகங்களும் தரையில் மோதி முழுவதும் சேதமடைந்துவிட்டன. சுற்றி இருந்தவர்களும் கற்களை வீசுகின்றனர். அவர்களை எல்லாம் அது மதிப்பது போலவே இல்லை.
 மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க
கடைசி வரை கோபம் தணியாத காளை, காரின் வலது புறத்தில் முட்டி காரை தலைக்கீழாக புரட்டி போட பார்த்தது. ஆனால் நல்லவேளையாக அதற்குள் ஒருவர் அருகில் வந்து தண்ணீரை அதன் மீது ஊற்றவே ஒருவழியாக காரை விட்டு விலகி சென்றது. மிக குறுகிய காலத்திலேயே காரில் பெரிய சேதத்தை காளை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு பெங்களூரில் எங்கு நடந்தது என்பது சரியாக தெரியவில்லை.
 மாருதி சுசுகி காரை குத்தி தூக்கி பந்தாடிய காளை மாடு... வீடியோவை பாருங்க
காளையால் சேதமடைந்துள்ள இந்த மாருதி சுசுகி ஆல்டோ கே10 மாடல் கார், 998சிசி-ல் மூன்று சிலிண்டர் அமைப்புகளுடன் அதிகப்பட்ச ஆற்றலாக 67 பிஎச்பி பவரையும் 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5 வேக நிலைகளை வழங்கக்கூடிய மேனுவல் கியர்பாக்ஸ் முன்புற சக்கரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆல்டோ கே10 கார் 765 கிலோகிராம் மட்டுமே இதன் எடை. இதனால் தான் காளையால் காரை மிக எளிதாக அதன் உயரத்திற்கு தூக்கி போட முடிந்துள்ளது.
காளை ஏன் இவ்வாறு முரட்டுத்தனமாக வாகனத்துடன் நடந்து கொண்டது என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தில் காரின் முன்புறம் மற்றும் பின்புறம் மட்டுமே சேதமடைந்துள்ளது. மற்றபடி என்ஜின் உள்ளிட்ட பாகங்கள் பாதிக்கப்பட்டது போல் தெரியவில்லை.
இந்தியாவை பொறுத்தவரை சாலையில் உலாவும் கால்நடைகளால் வாகன உரிமையாளர்களும், வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மாருதி சுஸுகி கார் மீது காளை மாடு தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் இதற்கு ஒரு உதாரணம் மட்டுமே. இதுதவிர கால்நடைகள் திடீரென வாகனத்தின் குறுக்கே வந்து விடுவதால், ஏராளமான விபத்துக்களும் நம் நாட்டில் நடக்கின்றன.
இந்த வகையில் பசு மாடு ஒன்று சமீபத்தில் லாரி ஒன்றின் குறுக்கே திடீரென வந்தது. ஆனால் பசுவை காப்பாற்றுவதற்காக அந்த லாரி டிரைவர் தன் உயிரையே பணயம் வைத்தார். அவர் அப்படி என்ன செய்தார்? என தெரிந்தால் நீங்கள் ஆச்சரியத்தில் மூழ்குவது உறுதி.
ஹாலிவுட் சினிமா படங்களை விஞ்சும் வகையிலான இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரல் ஆனதால், அந்த லாரி டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்த தகவல்களையும், வீடியோவையும் தொடர்ந்து பார்க்கலாம்.
இந்திய சாலைகளில் எந்நேரமும் விபத்து அபாயம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் இந்திய சாலைகள் மிகவும் அபாயகரமானவையாக கருதப்படுகின்றன. இந்திய சாலைகளில் எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதால்தான், இங்கு சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவாக இன்று, உலகிலேயே விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சாலை விபத்துக்களின் காரணமாக இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர் என உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization-WHO) சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தவிர சாலை விபத்துக்களுக்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இதில், முக்கியமானவை கால்நடைகள். இந்தியாவில் வாகன ஓட்டிகளின் உயிருக்கு கால்நடைகள் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி கொண்டுள்ளன.
பசு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் திடீரென குறுக்கே வந்து விடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, சாலை விபத்து அரங்கேறுகிறது. இதில், சில சமயங்களில் கால்நடைகளும் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது.
இந்த சூழலில் சாலையில் திடீரென குறுக்கே வந்த ஒரு பசுவை காப்பாற்றுவதற்காக, லாரி டிரைவர் ஒருவர் தன் உயிரையே பணயம் வைத்த வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி கொண்டுள்ளது. அதே சமயம் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டதால், அந்த டிரைவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
இதன்படி பசு ஒன்று, சாலையின் ஒரு முனையில் இருந்து மறுமுனை நோக்கி சென்று கொண்டிருந்தது. மறுமுனைக்கு அருகே சென்றதும் பசு சாலையில் திடீரென அப்படியே நின்று விட்டது. அப்போது அவ்வழியாக லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
இந்த சூழலில், லாரி வருவதை கண்ட பசு, உடனடியாக அங்கிருந்து திரும்பி, வந்த திசையிலேயே மீண்டும் ஓட ஆரம்பித்தது. இதனால் குழப்பமான சூழ்நிலை உருவானது. அந்த நேரத்தில் லாரி பசுவை நெருங்கி விட்டது. லாரி டிரைவருக்கு யோசிக்க ஒரு வினாடி கூட நேரமில்லை.
இருந்தபோதும் மிகவும் துணிச்சலாக செயல்பட்ட லாரியின் டிரைவர், தன் முழு பலத்தையும் உபயோகித்து பிரேக்கை பலமாக அழுத்தினார். இதன் காரணமாக சறுக்கி கொண்டு சென்ற லாரி, சாலையில் அப்படியே 180 டிகிரி கோணத்தில், ஒரு சுற்று சுற்றி நின்றது.
ஹாலிவுட் படங்களையே தூக்கி சாப்பிட்டு விடும் வகையிலான இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. லாரி டிரைவர் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டதால், பசுவின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஆனால் கொஞ்சம் அசந்திருந்தால் லாரி டிரைவர் பெரும் விபத்தில் சிக்கி கொண்டிருக்க கூடும்.
இருந்தபோதும் அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் பசுவின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் செயல்பட்டதால், அந்த லாரி டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன. நெட்டிசன்கள் மட்டுமல்லாது, விலங்குகள் நல ஆர்வலர்களும் அவரை பாராட்டி கொண்டிருக்கின்றனர்.
காண்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோவை பார்ப்பவர்களால், லாரி டிரைவரின் பிரெஸன்ஸ் ஆப் மைன்டை (Presence Of Mind) பாராட்டாமல் இருக்க முடியாது. லாரி வேறு திசையில் விலகி சென்று விடாமல், மிகவும் ஷார்ப் ஆக பிரேக் பிடித்த அவரது டிரைவிங் திறன், சமயோசித உணர்வு, மனிதநேயம் ஆகியவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான்.
இது ஒரு பால் கன்டெய்னர் லாரி ஆகும். சம்பவம் நடைபெற்ற சமயத்தில் அனேகமாக கன்டெய்னரில் லோடு எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை என தெரிகிறது. ஏனெனில் கன்டெய்னரில் லோடு இருக்கும் சமயத்தில், டிரைவர் இப்படி பிரேக் பிடித்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.
நமது இந்திய நாட்டு சாலைகளில், பசு, ஆடு, நாய் உள்ளிட்ட கால்நடைகள் திடீர் திடீரென குறுக்கே வருவது வாடிக்கையான ஒன்றாகவே உள்ளது. நம்மில் பலரும் வாகனங்களை இயக்கி கொண்டிருக்கும்போது, இதனை கண் கூடாக கண்டிருக்க கூடும்.
இதன் காரணமாக பலர் விபத்துக்களிலும் சிக்கியிருக்க கூடும். திடீர் திடீரென குறுக்கே வரும் கால்நடைகள் எவ்வித முன்னறிவிப்பும் செய்யாமல், தங்கள் திசைகளை மாற்றி கொண்டு தாறுமாறாக ஓடுவது இந்தியாவில் பொதுவாக நடக்கும் விஷயமாகி விட்டது.
எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்குவது நல்லது. ஏனெனில் நமது வாகனத்தின் முன்பு திடீரென எந்த கால்நடை வரும் என்பது நமக்கு தெரியாது. அப்படி ஒருவேளை கால்நடைகள் குறுக்கே வந்தால், கட்டுப்படுத்தும் வேகத்தில் வாகனங்களை இயக்குவது நல்லது.
இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பதில், கால்நடை உரிமையாளர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் சாலைகளில், சுற்றி திரிவதால்தான் இத்தகைய விபத்துக்கள் நடக்கின்றன. எனவே கால்நடைகளை பாதுகாப்பாக கட்டி வைக்கலாம்.
அப்படி கட்டி வைக்காத கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. ஆனால் உரிய முறையில் அமல்படுத்தப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக