இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
திருச்சியை நினைத்தவுடன் கண் முன்னே தெரிவது
மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலும் அதன் கம்பீரமும் தான் என்பது
அனைவரும் அறிந்ததே.
சுவாமி
: உச்சி பிள்ளையார், தாயுமானசுவாமி, மாணிக்க விநாயகர்.
அம்பாள்
: மட்டுவார்குழலி.
தீர்த்தம்
: காவிரி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.
தலவிருட்சம்
: வில்வம்.
வரலாறு :
தென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் உள்ள திருச்சி
நகரில் அமைந்துள்ளது உச்சிப்பிள்ளையார் கோவில். திருச்சீராபுரம் என்ற பெயரே,
திருச்சிராப்பள்ளி ஆனது என்கின்றனர்.
சுமார் 1800 வருடங்களுக்கு முன்பே, குணபரன் என்ற
மகேந்திர பல்லவ மன்னர் காலத்தில் இதைக் கட்ட ஆரம்பித்து, மதுரை நாயக்க மன்னர்களால்
விஜய மன்னர்கள் முன்னிலையில் பூர்த்தி செய்யப்பட்டது. இதைப் பூர்த்தி செய்ய 300
மனிதர்கள் தொடர்ந்து 11 வருடங்கள் உழைத்தனர்.
அமைப்பு :
இந்த கோவிலுக்கு செல்லும் படிகள் செங்குத்தாக
இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால், திருச்சி நகர் முழுவதும் அழகாய் காணலாம்.
மேலும் ஸ்ரீPரங்கம் கோவிலும் காவேரி நதியும்,
கொள்ளிடமும் நன்கு தெரிகிறது. இது, 150 அடி உயரமும், 437 படிக்கட்டுக்களும்
கொண்டது.
மலை மீது ஏறி செல்லும் வழியில் தாயுமானசுவாமி
கோவில் உள்ளது. இந்த கோவிலில் நூற்றுகால் மண்டபம் உள்ளது. கோவிலின் விமானம்
தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
மலைகோட்டையின் தெற்கு பக்கத்தில் பல்லவர்கள்
காலத்தில் உருவாக்கப்பட்ட குகை கோவில்கள் உள்ளன.
உலகத்திலேயே மிகவும் பழமையான மலைக்கோவில் இது
என்று கூறுகின்றனர். இவைகள் எல்லாம் இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம்.
இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள்
அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோவில், மேலே உச்சிப்பிள்ளையார் கோவில்,
மற்றும் இடையே தாயுமானவர் கோவில் ஆகியவை உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை
கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.
பொதுவாக சமதரை அமைப்பிலேயே உள்ள திருச்சி
மாநகரின் மத்தியில் சுமார் 83 மீட்டர் உயரமான இம்மலை அமைந்திருப்பது இயற்கையின்
சிறப்பாகும். மிகப் பழமையான மலைகளுள் ஒன்றான இது, ஏறத்தாழ 3400 மில்லியன்
வருடங்கள் பழமையானதாகக் கணக்கிடப்படுகிறது.
சிறப்புகள் :
விநாயகர் என்றாலே வினைகளை களைப்பவர் என்பது
பொருள்.
எந்த
காரியத்தையும் தொடங்குவதற்கு முன்பு வெற்றியை உறுதி செய்ய, விநாயக பெருமானுக்கு
பால் அபிஷேகம் செய்து, அருகம்புல் சாற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக