Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 14 நவம்பர், 2019

ருசியான சாம்பார் செய்து அசத்த வேண்டுமா?... இதை செய்யுங்கள்...!!

Image result for சமையல் டிப்ஸ்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 சமையலறை அலமாரிகளில், உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

 மைக்ரோவேவ் ஓவனில் (ஆiஉசழறயஎந ழுஎநn) உட்புறப் பகுதியை சுத்தப்படுத்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் அரை எலுமிச்சம் பழத்தை பிழிந்து, ஓவனில் 2 நிமிடங்கள் வைத்துவிட்டு துடைக்க பளிச்சென்று இருக்கும்.

 புளியைப் போட்டு வைக்கும் பாத்திரத்தின் அடியில் கொஞ்சம் உப்பைப் போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.

 கீரையைப் பருப்புடன் சேர்த்து செய்யும்போது, தக்காளி, புளி சேர்க்காமல் நெல்லிக்காயைத் துருவிச் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

 பாத்திரங்கள் அடிப்பிடித்துகொண்டால், பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கி போட்டு, சிறிது நீர் ஊற்றி வேக வைத்து, பிறகு தேய்த்துக் கழுவினால் அடிப் பிடித்த சுவடு காணாமல் போகும்.

 அடுப்பு, சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் பசை ஒட்டி இருந்தால், டைல்ஸை சாதாரண துணியால் துடைத்த பின் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து பசை பிடித்த இடங்களில் பூசிவிட்டு, உலர்ந்த துணியால் துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
வடைக்கு அரைக்கும்போது மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒரு தேக்கரண்டி நெய் விட, மாவு இறுகலாகிவிடும்.

 சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்து, பொடித்த தனியா பொடியை தூவி இறக்க வாசனை கமகமவென்று இருக்கும்.

 மோர்க்குழம்புக்கு மசாலா அரைக்கும்போது சிறிதளவு ஓமத்தை சேர்த்து அரைத்தால், குழம்பு ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

 கண்ணாடி பாட்டில் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் கடுகைப் போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும்.

நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்ச, நெய் வாசனையாகவும் இருக்கும். நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக