இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நம்முடைய தாத்தா, பாட்டியெல்லாம்
பூஜையறையில் சாமிக்கு அருகில் இந்த சிறிய கல்லை வைத்திருப்பதை நீங்கள்
கவனித்திருக்கிறீர்களா என்பது தெரியாது. ஆனால் இனிமேலாவது மறக்காமல் கவனியுங்கள்.
இந்த சாளக்ராமக்கல் எதனுடைய குறியீடு. அதற்கு அப்படி என்ன மகிமை என்றெல்லாம் ந்த
தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.
சாளக்ராமக்கல்
வீட்டில் இந்த சாளக்ராமக் கல் வைத்திருந்தால் என்னென்ன
அதிசயங்கள் நடக்கும் என்று தெரியுமா? இதென்ன கல்லைக் கொண்டு இங்க வெச்சிருக்காங்க
என்று கூட நாம் அதைப் பார்த்து யோசித்தருக்க மாட்டோம். ஆனால் இதைப் படித்து
முடித்தவுடன், ஓ இந்த கல்லுக்குள் இவ்வளவு விஷயம் இருக்கா? இது எப்படி நம்ம
தாத்தா, பாட்டிக்கு கிடைத்திருக்கும் என்றெல்லாம் புருவத்தை உயர்த்தி யோசிக்க
ஆரம்பித்து விடுவீர்கள். அந்த கல் எங்கிருந்து தோன்றுகிறது? அதை வீட்டில்
வைத்திருந்தால் என்னென்ன அதிசயங்கள் நடக்கும் என்பது பற்றி தான் இந்த தொகுப்பில்
விளக்கமாகப் பார்க்கப் போகிறோம்.
வைதீக முறைகளை அதிகமாகப் பின்பற்றுகின்ற குடும்பங்களில்
நிச்சயமாக இந்த சாளக்ராமக் கல் வைத்திருப்பார்கள். இதை வீட்டில் வைத்து மிகவும்
உயர்ந்ததாகக் கருதிப் பூஜிப்பார்கள்.
எங்கு உருவாகிறது?
சாளக்கிராமம் என்பது தெய்வீகம் நிறைந்த ஒரு கல் ஆகும். இது
பூஜிக்கத் தகுந்த ஒரு பொருள். இது மகாவிஷ்ணுவின் உருவங்களில் ஒன்று. இமயமலைக்கு
அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே சாளக்கிராமம் உற்பத்தியாகிறது. இது
எல்லோருக்கும் அவ்வளவு எளிதாகக் கிடைப்பதில்லை. கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்
என்று தான் சொல்ல வேண்டும்.
விஷ்ணு வாசம் செய்வது?
சாளக்கிராமக் கற்கள் என்பது விஷ்ணு பகவான் வாசம் செய்யக்கூடிய
பொருள்களில் ஒன்று. உள்ள இடத்தில் எம்பெருமான் மகாவிஷ்ணுவும், சகல இறைசக்திகளும்
நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரணமாக விருத்தியாகும். அதனாலேயே
உலகில் உள்ள எல்லா பொருள்களையும் விட இந்த கல் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
எப்படி இருக்கும்?
இது பார்ப்பதற்கு உருண்டை வடிவத்திம் தொட்டுப் பார்த்தால் மிக
மிக மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும். இந்த கல் கறுப்பு நிறத்திலும் அல்லது
சிவப்பு நிறத்திலும் என இரண்டு நிறங்களில் காணப்படும். இதை மிகவும் பத்திரமாக பூஜை
அறையில் தான் வைத்திருப்பார்கள்.
பரம்பரை பொக்கிஷம்
இந்த கல்லை தலைமுறை தலைமுறையாக வழிவழியாக பரம்பரையில்
தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்த தலைமுறையினருக்குக் கொடுப்பார்கள்.
அதையும் அவர்கள் வாங்கி பத்திரமாகப் பூஜை செய்வார்கள்.
பெண் திருமணம்
சில குடும்பங்களில் பெண் குழந்தைகளைப் பாசமாக வளர்த்துப்
பார்த்து பார்த்து செய்பவர்களாக இருந்தால் , பெண்ணைத் திருமணம் செய்து
கொடுக்கும்போது கன்னிகாதானத்தின் போது, இந்த கல்லையும் சீதனமாகக் கொடுப்பார்கள்.
என்ன அற்புதம் இதில் இருக்கு?
இந்த கல்லில் 14 உலோகங்களின் ஒட்டுமொத்த சக்திகள் இருப்பதாக
கூறப்படுகிறது. வழிபாடு செய்வதற்காக சாளக்கிராமங்களை ஞானம் பெற்ற
பெரியவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை
அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து
அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு.
ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன்,
திரிவிக்கிரமன், வாமணன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய
பன்னிரெண்டு கூறுகளாக கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக்
குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம்
புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு
வழிபடலாம்.
எந்த கலர் சிறந்தது?
சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த
வடிவங்கொண்ட திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன. வண்ணங்களுக்கேற்ப அவற்றின்
பூஜை பலன்களும் மாறுபடும்.
நீலநிறம் – செல்வத்தையும், சுகத்தையும் கொடுக்கும்
பச்சை – பலம், வலிமையைத் தரும்
கருப்பு – புகழ் மற்றும் பெருமை சேரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக