இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Join Our Telegram Channel
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஓலா, உபேர் புக்கிங்கை கேன்சல் செய்யும்
பயணிகளுக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் விதிமுறைகளை
வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது!!
ஓலா, உபேர் நிறுவனங்களில் ஓட்டுனர்களிடம்
இருந்து அதிகபட்சமாக 10 சதவீதம் அளவுக்குள் மட்டுமே ஓலா, உபேர் உள்ளிட்ட
நிறுவனங்கள் கமிசன் வசூலிக்கும் வகையிலும் உச்சவரம்பு நிர்ணயிக்க மத்திய அரசு
திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உபேர் மற்றும் ஓலா போன்ற நிறுவனங்களில்
கமிஷனுக்கு உச்சவரம்பு விதிக்க மையம் திட்டமிட்டுள்ளது. சவாரி செய்யும்
நிறுவனங்களுக்கான வரவிருக்கும் விதிமுறைகளில் மத்திய அரசு மொத்த கட்டணத்தில் 10%
தொகையை ஈட்டுகிறது, இது தொடர்பான விதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறையில்
இருக்கலாம்.
இதுபோன்ற வாடகை கார்களில் பயணிப்பவர்கள் செலுத்தும் கட்டணத்தில், ஓலா,
உபேர் போன்ற நிறுவனங்களின் கமிஷன் அளவு 20 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், மத்திய
அரசு உருவாக்க உள்ள புதிய விதிகளின் படி, வாடகை கார்களில் பயணிப்பவர்கள்
செலுத்தும் கட்டணத்தில் 10 சதவீதத்திற்குள் மட்டுமே ஓலா, உபேர் நிறுவனங்கள் கமிசன்
பெற இயலும்.
மேலும், ஒரு ஓட்டுநர் ஒரு நாளைக்கு புக்
செய்யும் டிரிப்புகளில் பத்து சதவீத டிரிப்புகளுக்கு மட்டுமே பீக் அவர்
கட்டணம் வசூலிக்க இயலும். ஓட்டுநர்கள் வாடிக்கையாளர்களின் புக்கிங்கை தன்னிச்சையாக
கேன்சல் செய்தால், அதிகபட்சமாக நூறு ரூபாய் வரை அவர்களிடம் இருந்து ஓலா, உபேர்
நிறுவனங்கள் அபராதம் வசூலித்துக் கொள்ளலாம்.
பீக் நேரங்களில் தற்போது வழக்கமான கட்டணத்தை
விட நான்கு முதல் ஐந்து மடங்குகள் வரை கூட ஓலா, உபேர் நிறுவனங்கள்
வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கிறது. புதிய விதிகளின் படி,
அதிகபட்சமாக அடிப்படை கட்டணத்தில் இருந்து இருமடங்கு மட்டுமே வசூலிக்கும் வகையில்
விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
3 மணி நேரத்திற்கு ஒரு முறை பயோமெட்ரிக்ஸ்
அல்லது ஃபேசியல் ரெகக்னிசன் முறையில் ஓட்டுநரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவது,
பயணிகளுக்கு 5 லட்ச ரூபாய் வரை காப்பீடு போன்ற விதிகளும் கட்டாயமாக்கப்பட உள்ளன.
இதேபோல மாநில அரசுகள் விரும்பினால், ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு மேல் வரி
விதிக்கலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் புக்கிங்கை
கேன்சல் செய்தால் 2 நாட்களுக்கு அந்த ஓட்டுநருக்கு புக்கிங் கொடுப்பதை ஓலா, உபேர்
நிறுவனங்கள் நிறுத்தி வைக்க முடியும். இதே போல் ஓலா, உபேர் ஆப்கள் மூலமாக
வாகனங்கள் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் அதனை பாதியிலேயே கேன்சல் செய்தால்
தற்போது 50 ரூபாய் வரை அவர்களிடம் இருந்து அடுத்த பயணத்தின் போது கட்டணம்
வசூலிக்கப்படுகிறது. புதிய விதிகளின் படி இந்த கட்டணம் 100 ரூபாய் வரை
உயர்த்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக