Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 18 டிசம்பர், 2019

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 10 கையெறி குண்டுகள் கண்டுபிடிப்பு


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ராணுவத்தினர் பயிற்சிக்காக பயன்படுத்தும் 10 கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தமானில், இந்திய ராணுத்தின், 72வது பட்டாலியன் உள்ளது. இதற்கு சென்னையில் உள்ள 172வது ராணுவ பட்டாலியன் மூலம் அனுப்பவதற்காக, நாக்பூரில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 10 கையெறி குண்டுகள் கொண்ட பெட்டி ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு கொண்டுவரப்பட்து.
இந்த கையெறி குண்டுகளை இதுவரையில் சென்னை ராணுவ பட்டாலியன் அதிகாரிகள் பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்த பெட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த பெட்டி உள்ளதை கண்டறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், ரூ.7 ஆயிரம் அபராதத்துடன் ராணுவத்திடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொண்டிருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!