கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில்
மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட ஒரு கும்பம்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச்
சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில்
ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.பேருந்து ஓட்டுநர்
ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார்
சிங் தாகூர் (பேருந்து உதவியாளர்) ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால்
அவர்களில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 6 பேரில் ஒருவர் சிறுவர்
என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.
பின்பு
3 ஆண்டுகள் கழித்து சீர்திருத்தப்பள்ளியில் இருந்து
விடுவிக்கப்பட்டார். அந்த 5 பேரில் முக்கிய குற்றவாளியான
ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.இதனால் மற்ற 4 பேரும்
தூக்கு தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்தனர். ஆனால்
உச்சநீதிமன்றம் 4 பேருக்கு தூக்கு தண்டைனையை உறுதிசெய்தது.
இந்த
வழக்கில் தொடர்புடைய குற்றவாளி அக்ஷய் குமார்சிங் உச்சநீதிமன்றத்தில்
சீராய்வு மனு தாக்கல் செய்தார். அக்ஷய் குமார்சிங் தாக்கல் செய்த
சீராய்வு மனு மீது விசாரணை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம்
அறிவித்தது. இதனை தொடர்ந்து நேற்று விசாரிப்பதாக இருந்தது.இந்த வழக்கில்
இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார்.இதனால் இன்று உச்சநீதிமன்ற
நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா அடங்கிய அமர்வு வழக்கை விசாரிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக