Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 3 டிசம்பர், 2019

கிறிஸ்தவ ஆலயத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் - 14 பேர் பலி

 


ப்பிரிக்க கண்டத்தின் கிழக்குப்பகுதியில் உள்ள ஹண்டொகுவோரா நகரில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 முன்னதாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாட்டின் போது அங்கிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதலைதொடர்ந்து பாதுகாப்புபடை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ராணுவத்தினர் அந்தப்பகுதியில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!