சனி, 14 டிசம்பர், 2019

2 பிறந்தவர்களின் ரகசியம்

 Image result for 2 பிறந்தவர்களின் ரகசியம்
பிறந்த எண்களிலுள்ள சில ரகசியம் (2, 11, 20, 29)ல் பிறந்தவர்களின் ரகசியம்

பிறப்பில் உள்ள சில ரகசியங்களை தெரிந்து கொள்வது மிக முக்கியமான ஒன்றாகும். 2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள் 2-ஆம் எண்ணின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள் ஆவார்.

குண அமைப்பு :

2-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள் என்பதால், நீர் எப்படி நிலையில்லாமல் ஓடுகிறதோ அதுபோல, சற்று சலன நெஞ்சம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். எந்தவொரு காரியத்தையும் தீர ஆலோசித்து செயல்படுவார்கள்.

எந்த செயலிலும் துணிந்து நின்று போராடி வெற்றியடைவார்கள். ஞாபகசக்தி அதிகம் கொண்டவர்கள். இரக்க குணம் உடையவர்கள். நுண்ணறிவும், கற்பனை சக்தியும் அதிகம் உண்டு.

கடுமையான பணிகளையும் சுலபமாக செய்து முடிக்கும் திறன் கொண்டவர்கள். தன் முயற்சியில் தோல்வி அடைந்தாலும் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். சங்கீதம், நடனம், நாடகத்துறை போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

அதிர்ஷ்ட கல் :

சந்திரனின் ஆதிக்கமான எண் 2-ல் பிறந்தவர்கள் அதிர்ஷ்ட கல்லாக முத்தை வெள்ளியில் பதித்து மோதிரமாக அணிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உடல் நோய்கள் குறையும். மன அழுத்தங்கள், குழப்பங்கள் விலகி நல்ல தெளிவு கிடைக்கும்.

பரிகாரங்கள் :

2-ஆம் எண்ணில் பிறந்தவர்கள் திங்கட்கிழமை துர்க்கா தேவிக்கு பூஜை செய்தும், வெங்கடாசலபதியை வழிபாடு செய்தும் வந்தால் மனக்குறைகள் குறைக்கும்.

அதிர்ஷ்டம் தருபவை :

அதிர்ஷ்ட தேதி - 1, 10, 19, 3, 12, 21, 30

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிர்ஷ்ட திசை - தென்கிழக்கு

அதிர்ஷ்ட கிழமை - திங்கள், வியாழன்

அதிர்ஷ்ட கல் - முத்து

அதிர்ஷ்ட தெய்வம் - வெங்கடாசலபதி, துர்க்கை

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த எண்களிலுள்ள ரகசியங்களை அறிந்து கொண்டு பரிகாரம் மற்றும் பூஜைகள் செய்தால் அனைத்தும் வெற்றிகளாகவே அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்