குரங்கு நீர்வீழ்ச்சி, கோயம்புத்தூரில் இருந்து 70கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சியிலிருந்து 28கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை மலைப்பகுதியில் பொள்ளாச்சிக்கும், வால்பாறைக்கும் இடையில் ஆழியார் அணைக்கு அருகில் குரங்கு நீர்வீழ்ச்சி (monkey falls) அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதே அதிக சுகமாக இருக்கும்.
அருவியிலிருந்து மேலே சென்றால் வால்பாறை, டாப்ஹில்ஸ் கீழே சென்றால் ஆழியார் டேம் என ஒரு நாள் முழுவதும் சுற்றி வரலாம்.
பாரஸ்ட் செக் போஸ்ட் கடந்து சென்றவுடன் சிறிய குரங்கு நீர்வீழ்ச்சி இருக்கிறது. எல்லோரும் இதை பார்த்தவுடன் இங்கேயே சென்று விடுகின்றனர்.
ஆனால், மேலே சிறிது தூரம் சென்றால் இன்னொரு பெரிய குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது.
அனுமதிக்கப்படும் நேரம் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை.
குரங்குகள் அதிகம் இருக்கும், கவனமாக இருக்கவும். மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும் காலங்களில் குளிக்க தடை விதிக்கப்படும்.
எப்படி செல்வது?
கோயம்புத்தூரிலிருந்து, பொள்ளாச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம். கோவையில் இருந்தே ஒரு வாகனத்தின் மூலம் சென்றால், வழியில் நின்று ஆர அமர ரசித்துக்கொண்டே பயணிக்கலாம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
பொள்ளாச்சி, கோயம்புத்தூர் மற்றும் பழனி போன்ற இடங்களில் பல்வேறு கட்டணங்களுடன் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
சோலையார் அணை.
பிர்லா.
புல் குன்று.
ஆழியார் அணை.
ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா.
கிராஸ் ஹில்ஸ்.
வியூ பாயிண்ட்ஸ்.
சின்னக்கல்லார்.
நல்லமுடி வியூ பாயின்ட்.
மேட்டுப்பாளையம்.
மருதமலை முருகன் கோவில்.
ஈஷா யோகா மையம்.
வெள்ளியங்கிரி மலை.
சிறுவாணி அருவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக