இதற்கு
முன் கோவை மாவட்டம் சூலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் மாணவர் ஒருவர்
11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன். இவர் தினமும் வகுப்பறையில் சேட்டை
செய்ததாகவும், பள்ளிக்கு செல்போனை எடுத்து வந்து, பாடத்தைக் கவனிக்காமல்
செல்போனில் கவனம் செலுத்திதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் பலமுறை
கண்டித்தும் மாணவர் அடங்கவில்லை.
இதனால்,
ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கூடி மற்ற மாணவர்களை
வகுப்பறையில் இருந்து வெளியேற்றி விட்டு கதவை இழுத்து மூடிவிட்டு அந்த மாணவரை
பிறப்பு உறுப்பை பிடித்து இழுத்து துன்புறுத்தியதாக வெளியான அந்த சம்பவம் கோவையில்
பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது.
தற்போது
அதே கோவை அருகே 2 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை தந்ததாக தலைமை ஆசிரியர் மற்றும் 3
ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேந்திரிய வித்யாலயா
தலைமை ஆசிரியர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா மீது வழக்கு பதிவு
செய்துள்ளனர். மேலும் போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் 4 பேரின் மீது வழக்குப்பதிவு
செய்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இது போன்று சம்பவம்
ஏற்படுவதால் கோவை மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக