Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 டிசம்பர், 2019

பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..


பார்வைதிறன் குறைபாடு உள்ளவர்கள் சவாலான வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பிரிட்டனைச் சேர்ந்த எட்டு வயது இந்திய வம்சாவளி சிறுமி ஒருவர், பார்வையற்றவர்கள் தாங்கள் பயணிக்கும வழியை சிறப்பாகக் கண்டறிய உதவும் வகையில் ஒரு புதுமையான நடை குச்சியை (வாக்கிங் ஸ்டிக்) உருவாக்கியுள்ளார்.

5000 பவுண்டுகள்

அவரது இந்த புதுமை கண்டுபிடிப்பு, இந்தாண்டின் பி.டி. இளம் முன்னோடி விருதை வென்றுள்ளது.மேலும் 5000 பவுண்டுகள் மதிப்புள்ள அவருக்கு விருப்பமான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அவரது ப்ராஜெட்-ஐ மேம்படுத்த வல்லுநர்களின் உதவியும் வழங்கப்படும்.

புதுமை கண்டுபிடிப்பு

அவரது இந்த புதுமை கண்டுபிடிப்பு, இந்தாண்டின் பி.டி. இளம் முன்னோடி விருதை வென்றுள்ளது.மேலும் 5000 பவுண்டுகள் மதிப்புள்ள அவருக்கு விருப்பமான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அவரது ப்ராஜெட்-ஐ மேம்படுத்த வல்லுநர்களின் உதவியும் வழங்கப்படும்.

கண்பார்வை பாதிக்கப்பட்ட மக்கள் 

2016 ல் (அவர் கிட்டத்தட்ட 5 வயதாக இருந்தபோது) அவர் ஒரு பார்வையற்ற பெண்மணி சாலையை கடக்க உதவினார். அப்போது அவர் சாலையில் ஒரு சிறு படிக்கட்டு இருப்பதை சுட்டிக்காட்ட மறந்த நிலையில், அந்த பார்வையற்ற நபரும் அதை உணரமுடியாததால் கிட்டத்தட்ட கீழே விழுந்துவிட்டார். கண்பார்வை பாதிக்கப்பட்ட மக்கள் படும் துன்பங்களை இந்த சம்பவம் அச்சிறுமிக்கு உணர்த்தியதால், அவர்களுக்கு உதவ ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினார்.

ஸ்மார்ட் ஸ்டிக் 

தொழில்நுட்ப ஆர்வலராகவும், சென்சார் மற்றும் இதர மின்னணு பொருட்களில் பணியாற்றுபவருமான தனது மூத்த சகோதரர் அர்னவ் (அப்போது அவருக்கு 9 வயது) உடன் இணைந்து 2016 ஆம் ஆண்டு, ஸ்மார்ட் ஸ்டிக் ஒன்றை உருவாக்கும் பணியை தொடங்கினார் இந்த சிறுமி. அவர்கள் இருவரும் இணைந்து ஸ்மார்ட் வாக்கிங் ஸ்டிக்-ஐ உருவாக்க முடிவுசெய்தனர்.

அல்ட்ராசோனிக் சென்சார்கள்

ஒரு சில ஆண்டுகளுக்கு ஆரம்பகட்ட வடிவமைப்பை அவர்கள் உருவாக்கிய நிலையில், இப்போது சாதாரணமான அமைப்பு என்ற நிலையை கடந்து மிகுதியான தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்பானதாக மாற்றியுள்ளனர். இந்த வாக்கிங் ஸ்டிக்-ல் உள்ள இரு அல்ட்ராசோனிக் சென்சார்கள் தடைகளை கண்டறிய உதவுகிறது. நீருள்ள பகுதியை அறியும் வகையில் இதில் தண்ணீர் சென்சாரும் உள்ளது. 

திசைக்கு ஏற்ப அவை அதிரும்

பார்வையற்றவர்கள் தடைகளை கடக்கும் போது இந்த வாக்கிங் ஸ்டிக்கின் அதிரும் மோட்டர் எச்சரிக்கை செய்யும். மேலும் இது ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்திற்கு செல்லவும் உதவுகிறது. இதன் கைப்பிடி-ல் இடது மற்றும் வலதுபுறம் என இரட்டை அதிர்வு மோட்டார் உள்ளது. செல்லவேண்டிய பாதையின் திசைக்கு ஏற்ப அவை அதிரும். இதில் உள்ள ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் ஆகியவற்றை கொண்டு, ஸ்மார்ட்போன் உடன் இணைக்கமுடியும் என்பதால் பயணிப்பது சுலபமாக இருக்கும்.

டெக்4குட்

இந்த ஸ்மார்ட் ஸ்டிக் எளிய 3D அச்சிடும் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது என்பதால், பயனர்களின் உடல் அமைப்பு மற்றும் தனிப்பட்ட அழகியல் விருப்பத்தேர்வுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்படலாம். இதில் போதுமான தொழில்நுட்பம் இல்லை என்று கருதினால், இந்த ஸ்டிக் உடன் ராஸ்பெர்ரி பை கேமரா நிறுவும் வசதியும் உள்ளது. இருண்ட பகுதிகளில் வெளிச்சம் ஏற்படுத்தும் வகையில் எல்.ஈ.டி. அம்சமும் இதில் உள்ளது.

BT இளம் முன்னோடி விருதை வென்ற பிறகு கருத்து தெரிவித்த அந்த சிறுமி, "நான் இந்த விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டதில் மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன். நான் இதை வென்றதை இன்னமும் நம்பமுடியவில்லை. என் சகோதரன் அர்னவ் 2016 ல் டெக்4குட் விருதை வென்றபோது, தொழில்நுட்பம் மூலம் எப்படி மற்ற மக்களுக்கு உதவ முடியும் என்பதை பற்றி அதிகம் சிந்திக்க தொடங்கினேன். ஸ்மார்ட் ஸ்டிக்-ஐ மேலும் மேம்படுத்த பிடி உடன் பணியாற்ற ஆர்வமாக காத்திருக்கிறேன். எனவே தான் இது உண்மையில் தேவைப்படும் மக்களை விரைவில் சென்றடையும்" என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக