உலகெங்கிலும் குறிப்பாக இந்தியாவில் மொபைல் போன்கள் வழியிலான
டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளுக்காக பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. மறுபக்கம்
பல வகையான சைபர் கிரைமினல்கள் அப்பாவி பயனர்களை எப்படியெல்லாம் இரையாக்கலாம்
என்கிற தந்திரமான வழிகளை கண்டுபிடித்துக்கொண்டே வருகின்றனர்.
மிகவும்
ரகசியமானதாகவே இருக்கும்; ஏனென்றால்?
அப்படியான தந்திரமான திருட்டு வழிகளானது, பெரும்பாலும் மிகவும்
ரகசியமானதாகவே இருக்கும். ஏனெனில் இப்படியொரு திருட்டு வழி இருக்கிறது என்று
நமக்கெல்லாம் தெரிந்து விட்டால் நாம் உஷாராகி விடுவோம் அல்லாவா?
முன்னெச்சரிக்கையாக ஏதாவது செய்து விடுவோம்
அல்லவா? அப்படியாக பலரும் கேள்விப்படாத
மற்றும் மிகவும் அறியப்படாத (ஆனால் மிகவும் விபரீதமான) ஒரு சைபர் குற்றம் தான் -
ஜூஸ் ஜாக்கிங்!
சமீப காலமாக, டெபிட் மற்றும் கிரெடிட்
கார்டு விவரங்கள் மற்றும் ஓடிபி போன்றவற்றை பயனர்களுக்கே தெரியாமல் அவர்களின் போன்
வழியாகவே பெற்று, அதை பயன்படுத்தி ஹேக்கர்கள் அப்பாபி மக்களின் பணத்தை திருடும்
சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன என்கிற செய்திகளை அதிகம் படித்து
இருப்போம். அந்த பிண்ணனியில் வேலை செய்யும் ஒரு சைபர் க்ரைம் தான் - ஜூஸ்
ஜாக்கிங்!
ஜூஸ்
ஜாக்கிங் என்றால் என்ன?
அறியப்படாத இந்த சைபர் திருட்டின்
மீது வெளிச்சத்தை பாய்ச்சும் நோக்கத்தின் கீழ், நாட்டின் முதன்மையான நிதி
நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 'ஜூஸ் ஜாக்கிங்' அல்லது யூ.எஸ்.பி சார்ஜிங்
மோசடி பற்றிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூஸ் ஜாக்கிங் என்பது விமான
நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் அணுக கிடைக்கு சார்ஜிங்
பாயிண்ட் வழியாக மொபைல் போன்களை பாதிக்கக்கூடிய ஒரு புதிய மற்றும் மிகவும் மோசமான
ஒரு நுட்பமாகும்.
ஜூஸ்
ஜாக்கிங் எப்படி வேலை செய்யும்? எதையெல்லாம் திருடும்?
விமான நிலையம் மற்றும் இரயில்
நிலையங்களில் காணப்படும் சார்ஜிங் ஸ்டேஷன்களில் இணைக்கக்கூடிய - பார்ப்பதற்கு
மிகவும் சாதாரணமாக காட்சியளிக்கும் - ஒரு அதிநவீன யூ.எஸ்.பி போர்ட் போன்ற கேஜெட்டை
(சாதனத்தை) ஹேக்கர்கள் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஒருவேளை நீங்கள் உங்களின்
ஸ்மார்ட்போனை அதில் செருகியவுடன், உங்கள் ஸ்மார்ட்போனின் 'போன் செக்யூரிட்டி' ஆனது
உட்செலுத்தப்படும் மால்வேர்களின் உதவியுடன் தகர்க்கப்படும். பின்னர் உங்கள்
ஸ்மார்ட்போனில் உள்ள தொடர்பு விவரங்கள், மின்னஞ்சல்கள், செய்திகள், புகைப்படங்கள்,
ப்ரைவேட் வீடியோக்கள் மற்றும் முக்கியமான நிதி நற்சான்றிதழ்கள் உள்ளிட்ட முழு
உள்ளடக்கங்களையும் ஹேக்கர்களால் திருட முடியும்.
கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ்
கவுண்டியின் மாவட்ட வழக்கறிஞர் துறையானது, உள்ளூர்வாசிகள் மற்றும் பயணிகளுக்கு
பப்ளிக் சார்ஜிங் ஸ்டேஷன்களில், குறிப்பாக விமான நிலையங்களில் ஸ்மார்ட்போன்களை
சார்ஜ் செய்வதைத் தவிர்க்குமாறு எச்சரித்த சில வாரங்களுக்குப் பிறகு எஸ்பிஐ இந்த
எச்சரிக்கை தனது வாடிக்கையாளர்களுக்கு விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூஸ்
ஜாக்கிங் எனும் வலையில் இருந்து உங்கள் ஸ்மார்ட்போன்களை பாதுகாப்பது எப்படி?
யூ.எஸ்.பி சார்ஜிங் மோசடி அல்லது ஜூஸ்
ஜாக்கிங் என்று அழைக்கப்படும் இந்த சைபர் குற்றத்தின் கீழ் நீங்கள் சிக்கிக்கொள்ள
விரும்பவில்லை என்றால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை முகம் தெரியாத
நபர்கள் திருடுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால் கீழே தொகுப்பட்டுள்ள மூன்று
விடயங்களை கருத்தில் கொள்ளுங்கள்!
எப்போதுமே டூ-பின் எலெக்ட்ரிக்கல் ஏசி அவுட்லெட்
(two-pin electrical AC outlet) மூலம் மட்டுமே உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜிங்
ஸ்டேஷன்களில் சொருகவும்.
யூ.எஸ்.பி போர்ட் வழியாக உங்கள்
ஸ்மார்ட்போனை சார்ஜிங் ஸ்டேஷன்களில் சொருக வேண்டாம்.
ஜூஸ் ஜாக்கிங்கைத் தவிர்ப்பதற்கான
சிறந்த வழி என்னவென்றால், உங்களின் சொந்த பவர் பேங்க்குகளை எடுத்துச் செல்வதே
ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக