Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 டிசம்பர், 2019

அம்மா உணவகங்களில் ரூ. 484 கோடி நஷ்டம் ! என்ன செய்யப் போகிறது அரசு ?

 Image result for அம்மா உணவகம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டது அம்மா உணவகம். ஏழை, எளிய மக்களின் பசியைப் போக்க குறைந்த விலையில் உணவு வழங்கும் திட்டம் மக்களிடம் பிரபலமானது. இந்நிலையில் அம்மா உணவகத்தின் மூலம் ரூ.484 கோடி நஷ்டம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், கடந்த 2012 ஆம் ஆண்டு அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.  சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.669 கோடி செலவில், 407 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இதில், அரசின் உதவியுடன், மகளிர் குழுக்களால் தயாரிக்கபட்ட உணவுப்ம்பொருட்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டன. ஆனால் இதன் மூலம் கிடைத்த வருவாய் வெறும் ரூ.185 கோடி மட்டுமே வருமானம் கிடைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இப்போது மக்கள் அம்மா உணவகங்களில் சாப்பிடுவதில்லை என்பதால் ரூ.484 கோடி அளவுக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது. எனவே, பல இடங்களில் தயாராகும்  உணவுப் பொருட்களை ஒரே இடத்தில் தயார் செய்யவும் அதுபோக, அம்மா உணவகத்தில் உள்ள இடத்தை ஏடிஎம் மையத்துக்கும், ஆவின் பாலகம் அமைக்கவும் தற்போது  தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறதாகவும் செய்திகள் வெளியாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக