Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 டிசம்பர், 2019

`ரகசியத் தூண்டல் ரசனையைக் கெடுக்கும்!' - ஆன்லைன் ஷாப்பிங் எச்சரிக்கை

 Image result for ஆன்லைன் ஷாப்பிங்
"பேனா பென்சிலைக் கூட ஆன்லைனில் செலக்ட் செய்கிறார்கள். இவர்கள் வெறுமனே தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொள்ள வாழ்பவர்கள். ரசனைத் தன்மை குறைந்திடும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு."
குழந்தை அப்பாவின் தோளில் அமர்ந்து திருவிழா ரசிக்கும். இடையிடையே, `ப்பா, பலூனு.. ஒரே ஒரு கலரு கண்ணாடி.. பம்பரம் மட்டும்பா, வேறெதும் கேட்கவே மாட்டேன்' என அனத்துவதும், அப்பா அதட்டுவதும், பிள்ளை அழுவதும், கேட்டதை வாங்கித் தந்து ஆற்றுப்படுத்துவதும்.. அப்பப்பா! அந்த நேரத்தில் உணர்வுகள் வெவ்வேறாய் இருக்கலாம், வளர்ந்து வயதானதும் இருவருக்கும் அவை, சுகமான நினைவுகளே!
இந்த அனுபவத்தை இப்போதிருக்கின்ற பல குழந்தைகளும் மெள்ள மெள்ள இழந்து வருகின்றனர். எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்ட இந்தக் காலம், ஆன்லைன் குடித்தனத்தைத்தான் பரிந்துரைக்கிறது.
மனநல மருத்துவர் அசோகனிடம் பேசினோம். "அமேசான், ஃபிளிப்கார்ட், ஓஎல்எக்ஸ் என ரொம்ம்ம்பப் பெரிய லிஸ்ட்டே இருக்கிறது. இந்த ஆன்லைன் நிறுவனங்கள் வழியே நெய்ல் பாலிஷிலிருந்து, ஹேர்டை வரை வாங்கி நம்மை அழகுபடுத்திக் கொள்கிறோம். வேண்டிய அளவு, கலர், எண்ணிக்கை இன்னும் எல்லா ஷார்ட்லிஸ்ட்களின்படியும் அவை கிடைக்கின்றன.
பொருள் சேதமடைந்து இருந்தாலோ, பிடிக்கவில்லை யென்றாலோ திருப்பிக் கொடுத்துவிடும் வசதியும் உள்ளது. பண்டிகைக்கால ஆஃபர்கள், புதிய வரவுகள் என கவர்ச்சி விளம்பரங்களுக்கும் பஞ்சமில்லை. இவையெல்லாமே ஆன்லைன் ஷாப்பிங் பக்கம் நம்மை வெகுவாக ஈர்த்துவிடுகிறது.
மெனக்கெட்டு கிளம்பிப்போய் நான்கு கடைகள் ஏறி இறங்கி பொருள்கள் வாங்குவது, நமது அத்தியாவசியத் தேவைக்கானதாகத்தான் இருக்கும். ஆனால், இப்போதைய தலைமுறை compulsive buying-ஐச் செய்கிறார்கள்.
இன்னொரு பக்கம் சென்னை ரங்கநாதன் தெருவும், மதுரை விளக்குத்தூணும் களைகட்டிக் கொண்டுதான் இருக்கின்றன என்றாலும், ஆன்லைனிலேயே தங்கள் ரெகுலர் ஷாப்பிங்கைச் செய்பவர்கள் பெருநகரங்களில் மிக அதிகம். பேனா பென்சிலைக் கூட ஆன்லைனில் செலக்ட் செய்கிறார்கள். இவர்கள் வெறுமனே தேவையை மட்டும் பூர்த்தி செய்துகொள்ள வாழ்பவர்கள். ரசனைத் தன்மை குறைந்திடும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு.
குடும்பத்தோடு கடைக்குள் சென்று பலமணிநேரம் தேடிப்பிடித்து பட்டுச்சேலை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போது, `ஏங்க, சேலையைக் கொடுங்க, வெளிச்சத்தில பார்ப்போம்' என்று செலக்ஷனை உறுதிசெய்து கொள்வர், தாய்மார்கள். ரசனையின் ரகம், இவையெல்லாம்.
மெனக்கெட்டு கிளம்பிப்போய் நான்கு கடைகள் ஏறி இறங்கி பொருள்கள் வாங்குவது, நமது அத்தியாவசியத் தேவைக்கானதாகத்தான் இருக்கும். ஆனால், இப்போதைய தலைமுறை compulsive buying-ஐச் செய்கிறார்கள். அதாவது, என்ன பயன்பாட்டுக்காக வாங்குகிறோம் என்பதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், வாங்கியே ஆக வேண்டும் என்பதே ஆன்லைன் ஷாப்பிங் மனிதர்களின் எண்ணமாக இருக்கின்றது. இது, சுயதேவை பற்றிய தெளிவை மழுங்கடிக்கும்.
மேலும், நாம் ஆன்லைனில் ஒன்றைத் தேடினாலோ, வாங்கினாலோ தொடர்ந்து அதேபோன்ற விளம்பரங்கள்தான் நம் இணைய பக்கங்களை வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும்.
ரகசியத் தூண்டலாக நடைபெறும் இந்தச் செயல்பாடு, சுய தேடலை மட்டுப்படுத்தி ரசனையை ஒரு வட்டத்துக்குள் சுருங்கிவிடுகிற அபாயத்தை ஏற்படுத்தும்.
நவீன வளர்ச்சிக்கேற்ப ஆன்லைன் ஷாப்பிங் அவசியமானதாகவே ஆகிவிட்டதுதான். அதை மறுப்பதற்கும் தவிர்ப்பதற்கும் இல்லை. இருந்தாலும், எண்ணிச் செலவு செய்வதும், தேடிச் சென்று ஷாப்பிங் செய்வதும் எப்போதுமே ஆரோக்கியமானதுதான்" என்று சொல்லி முடித்தார்.
காதலுக்கும் இணையருக்கும் நம் அன்புக்குரியவருக்கும் ஆசைப்பட்டு வாங்கித் தரும் எந்தப் பொருளிலும் ஓர் உயிர் இருக்கும். வீட்டிலிருக்கும் அந்தப் பொருள், வீதிவீதியாய் அலைந்து திரிந்து கடைசியில் அதை வாங்க பட்ட பாட்டினை கதையாய் சொல்லும், ஒவ்வொரு கணமும் ஒருவித மகிழ்ச்சி இருக்கும்தானே? அதை இந்தத் தலைமுறையும் எதிர்வரும் சந்ததியும் எப்போதும் உள்ளூர உணர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக