Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 டிசம்பர், 2019

அதிரடியாக கட்டணத்தை உயர்த்தியது வோடஃபோன் ஐடியா: வரும் 3-ம் தேதி முதல் அமல்

 Image result for அதிரடியாக கட்டணத்தை உயர்த்தியது வோடஃபோன் ஐடியா: வரும் 3-ம் தேதி முதல் அமல்
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா நிறுவனம் மொபைல் அழைப்புகள், டேட்டா கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு வரும் 3-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்தோடு முடிந்த 2-வது காலாண்டில் வோடஃபோன் ஐடியா நிறுவனம் கார்ப்பரேட் நிறுவனங்களில் 2-வது மிகப்பெரிய இழப்பைச் சந்தித்தது. வரி தொடர்பான வழக்கில் தொலைத்தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவையை வோடஃபோன் நிறுவனம் செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் வோடஃபோன் ஐடியா நிறுவனம் ஏறக்குறைய ரூ.50 ஆயிரத்து 921 கோடி இழப்பைச் சந்தித்தது. இதனால் கடந்த 18-ம் தேதி வோடஃபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “வோடஃபோன் ஐடியா நிறுவனம் மிகுந்த நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதில் அதில் இருந்து விடுபடுவதற்கு மொபைல் சர்வீஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆதலால் டிசம்பர் 1-ம் தேதியி்ல இருந்து மொபைல் சர்வீஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் டிஜிட்டல் ரீதியான சேவை உறுதி செய்யப்படும்” எனத் தெரிவித்தது.
அதன்படி வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கான மொபைல் அழைப்பு, டேட்டா கட்டணங்களை முன்பு இருந்த அளவைக் காட்டிலும் 42 சதவீதம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 2 நாட்கள் வேலிடிட்டி, 28 நாட்கள் வேலிடிட்டி, 84 நாட்கள், 365 நாட்கள் வேலிடிட்டி ஆகிய திட்டங்களை வோடஃபோன் ஐடியா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்தப் புதிய கட்டண உயர்வு அனைத்தும் வரும் 3-ம் தேதி நள்ளிரவு முதல் நடைமுறைக்க வந்துவிடும் என வோடஃபோன் ஐடியா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காம்போ பிளானில் ரூ.49க்கு 38 டாக்டைம், 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ரூ.79க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.64 டாக்டைம் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் எனத் தெரிகிறது.
அன் லிமிட்டட் பேக்கில் (28 நாட்கள் வேலிடிட்டி) ரூ.149, ரூ.249, ரூ.299, ரூ.399 ஆகிய விலையில் திட்டங்கள் உள்ளன.
அன் லிமிட்டட் பேக்கில் (84 நாட்கள் வேலிடிட்டி) ரூ.379, ரூ.599, ரூ.699 ஆகிய விலையிலும், ஒரு ஆண்டுக்கான வேலிடிட்டியில் ரூ.1,499, ரூ.2,399 ஆகிய விலையிலும் திட்டங்கள் உள்ளன. இதுதவிர பர்ஸ்ட் ரீசார்ஜ் கட்டணங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக