ஒவ்வொரு
காலையும் நன்றாக விடிய வேண்டுமானால், கழிப்பறையில் இருந்து இன்முகத்துடன் ஒருவர்
வெளியே வர வேண்டும். காலைக்கடன் என்பது அந்த அளவுக்கு ஒரு மனிதரின் செயல்பாட்டையே
நிர்ணயிக்கும் வல்லமை கொண்டதாக உள்ளது. சில நேரங்களில் நாள் முழுவதும்
சிடுமூஞ்சியாகத் திரிவதற்கும் கூட மலச்சிக்கல் வழி வகுத்துவிடும். இதனை
உணர்ந்துகொள்ளாமல், வேறு வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டால் மலச்சிக்கல்
மனச்சிக்கலைக் கூட ஏற்படுத்திவிடும்.
அதனால்தான்,
மலஜலம் கழிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது என்று அறிவுறுத்தியிருக்கின்றனர். பூமத்திய
ரேகையின் அருகே இருக்கும் ஆசிய நாடுகள் பெரும்பாலானவற்றில் வெப்பமான
தட்பவெப்பநிலையே இருக்கும். அதற்கேற்றாற்போல, மக்கள் உணவு உண்ணும் திறனும்
அமைந்திருக்கும். தினமும் 3 அல்லது 4 முறை உணவு உண்ணும்போது அதற்கேற்றாற்போல
கழிப்பறை செல்ல வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. டஸ்ட்பின் நிறைந்தபிறகு மேலும்
குப்பையைக் கொட்ட முடியாது.
கிட்டத்தட்ட
உடலிலும் அதேபோன்ற விளைவுதான் ஏற்படுகிறது. குறிப்பாக, உட்கார்ந்த இடத்தைவிட்டு
எழாமல் பணியாற்றுவோர் இதனால் கடுமையான சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். மூல நோய்
வருவதற்கும், பௌத்திரம் எனப்படும் பிட்டத்தில் கட்டி உருவாவதற்கும் இதுவே
அடிப்படைக் காரணம். சில நேரங்களில் ஆஸ்துமாவுக்கும் கூட மலச்சிக்கல் வழிவகுப்பதாகச்
சொல்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.
வெளியிடங்களுக்குச்
சென்றால் கழிப்பறைகளை நாடுவதில் பெண்கள்தான் தயங்குவார்கள். இன்று, பள்ளிகளில்
அடிக்கடி கழிப்பறைக்குச் செல்லக் கூடாது என்று கட்டளையிடுவதால் சிறுமிகளும்
சிறுவர்களும் கூட தண்ணீர் குறைவாகக் குடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.
விளைவு, மலச்சிக்கல் ஏற்பட்டு அதன் மூலமாகப் பல்வேறு நோய்கள் அவர்களைத்
தொற்றுகின்றன.
தேவையான
அளவு நீர் பருகுதல், சரியான இடைவெளியில் அருந்துதல், நார்ச்சத்து உள்ள உணவுகளை
எடுத்துக்கொள்ளுதல், போதுமான அளவுக்கு உடற்பயிற்சி மேர்கொள்ளுதல் போன்றவற்றை
மேற்கொள்வதால் இப்பிரச்சினையைத் தொடக்கத்திலேயே சரி செய்ய முடியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக