வீட்டுல சாப்பாடு பண்ணலையா வாங்க ஹோட்டலுக்கு போகலாம்’ என்ற
பேச்சு இப்போது பரவலாகிவிட்டது. வெளியூரில் பணியாற்றுபவர்கள், வீட்டைவிட்டு வெகுதூரம்
பயணிப்பவர்கள்,
பள்ளி மற்றும் கல்லூரியில் தங்கிப் படிப்பவர்கள், வேலை தேடுபவர்கள்
என்று ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கென்றே ஒரு கூட்டம் உண்டு. அவர்களை மட்டுமே நம்பி
ஹோட்டல்கள் இயங்கி வந்தன.
இப்போது, ‘ஃபார் எ சேஞ்ச்’ என்று குடும்பத்துடன் வெளியே
ஹோட்டல்களைத் தேடிப் பிடித்து சாப்பிடுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டது. அதனால்,
வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படுவதும் அதிகமாகியிருக்கிறது.
வீடுகளில் பார்த்துப் பார்த்துச் சமைப்பதைப் போல
ஹோட்டல்களில் உணவுகள் தயாராவதில்லை. பெருமளவில் தயாரிக்கப்படுவதும், துரிதமாகச்
சமைக்கப்படுவதும் அவற்றில் சில வேதிப்பொருட்களைக் கலக்க வேண்டிய நிலையை
ஏற்படுத்துகின்றன. நுகர்வோருக்குச் செய்யும் துரோகம் இது என்பவர்கள் இச்செயலில்
ஈடுபடவில்லை. அதனைக் கணக்கில் கொள்ளாதவர்களிடம் சிக்கிவிட்டால் அவ்வளவுதான்.
உணவு செரிக்காமல் வயிறு எரிச்சலாக இருப்பதைப் போன்ற உணர்வு
ஏற்படும். இதனைத் தீர்க்க எளிய வழி கருவேப்பிலையை நாடுவதுதான். அரை கிளாஸ் பாலுடன்
10 கிராம் கறிவேப்பிலையைச் சேர்க்க வேண்டும். அதனை நன்றாகக் கொதிக்க வைத்து,
அதன்பின் வடிகட்டி அருந்தினால் போதும். எவ்வளவு பெரிய வயிற்றுப் பிரச்சினையாக
இருந்தாலும் உடனடியாகச் சரியாகும்.
வீட்டுக்கு வந்தபின்னும் இந்த பிரச்சினை தொடர்வதாகக்
கருதுபவர்கள் கறிவேப்பிலை துவையல் சாப்பிடலாம். சாதாரணமாகவே சாதத்துடன் கலந்து
இதனை உண்ணலாம். இதுபோன்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் உணவில்
கறிவேப்பிலையோ, மல்லி இலைகளோ சேர்க்கப்படுகின்றன.
முக்கியமாக குழம்பு அல்லது காய்கறி பதார்த்தங்களில்
கறிவேப்பிலை சேர்க்கப்படுவதுதான் நோக்கமும் அதுதான். இது புரியாமல், சமைத்தபிறகு
சிலர் அலங்காரம் போல கறிவேப்பிலையைப் பயன்படுத்துகின்றனர். பச்சையாகக்
கறிவேப்பிலையைச் சாப்பிடுவதில் தவறில்லை என்றபோதும், பலர் அதனை விரும்புவதில்லை
என்பதே உண்மை.
வீடானாலும் ஹோட்டலானாலும் கறிவேப்பிலையை ஒதுக்காமல்
சாப்பிடப் பழக வேண்டும். அவ்வாறு செய்யத் தொடங்கினால், தொட்டாச்சிணுங்கி
போலிருக்கும் வயிறு கூட தன் இயல்பை மாற்றிக்கொள்ளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக