பாபநாசம் அணை திருநெல்வேலியில் இருந்து ஏறத்தாழ 53கி.மீ தொலைவிலும், பாபநாசத்திலிருந்து ஏறத்தாழ 3கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 105கி.மீ தொலைவிலும் அமைந்து ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகின்றது.
பாபநாசம் அணை மேற்கு தொடர்ச்சியில்
உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டுள்ளது.
இந்த அணை தாமிரபரணி ஆற்றங்கரையில்
அமைந்துள்ள பாபநாசம் அருவிக்கு மிக அருகாமையில் உள்ளது.
பாபநாசம் அணையில் புனல் மின் நிலையம்
செயல்பட்டு வருகிறது.
சிவபெருமானும், பார்வதி தேவியும்
அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடமாக இது கருதப்படுவதால், இது ஒரு
புண்ணிய ஸ்தலமாகவும் திகழ்கிறது.
மலைகளாலும், மரங்களாலும் சூழ்ந்துள்ள
இந்த அணையை பார்ப்பதற்கு ஒரு அழகிய ஓவியம் போல் இருக்கும். இரண்டு மலைகளுக்கு
இடையே அழகாக கட்டப்பட்டுள்ளது இவ்வணை.
அதனாலேயே பல சுற்றுலாப்பயணிகளை
இவ்விடம் அதிகம் கவர்கிறது. பாபநாசம் வரும் பயணிகள் பெரும்பாலும் அகஸ்தியர்
அருவியிலும், தலையணையிலும் குளித்து மகிழ்வர்.
பாபநாசம் அணைக்கு வருகை தரும்
சுற்றுலாப் பயணிகளுக்கு அணையில் படகு சவாரி செய்து அக்கரைக்கு சென்று பாணத்
தீர்த்த அருவியில் குளிப்பது பெரிதும் கவர்ந்துள்ளது.
இதனால் நாளுக்கு நாள் சுற்றுலாப்
பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள்
கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைத்து
வயதினரும் படகில் பயணம் செய்து மகிழ்ச்சியாக இருக்க ஏற்ற இடமாக இருக்கிறது இந்த
பாபநாசம் அணை.
எப்படி
செல்வது?
திருநெல்வேலிக்கு அனைத்து முக்கிய
நகரங்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
எப்போது
செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு
தங்குவது?
திருநெல்வேலி மற்றும் பாபநாசத்தில்
பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர
சுற்றுலாத்தலங்கள் :
- பாபநாசம் அருவி.
- அகஸ்தியர் அருவி.
- பாணதீர்த்தம் அருவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக