Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 டிசம்பர், 2019

ரூ.70 கோடி போனஸ் கொடுத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி தந்த தனியார் நிறுவனம்..!

Image result for bonus



மெரிக்காவை உள்ள மேரிலேண்ட் பகுதியில் இயங்கி வரும் செயின்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ் எனும் ஒரு தனியார் நிறுவனம் சுமார் ரூ.70 கோடி அளவுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் அளித்து தனது ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்த்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்த அந்நிறுவனம், அப்போது சிவப்பு நிற கை உறைகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பின் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய நிறுவன தலைவர் எட்வர்டு செயிண்ட் ஜான் அறிவித்தபடி அந்த உறைகளை பிரிக்க சொன்னார். அதைக்கேட்டு பிரித்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
பின்னர் அந்த உறைகளில் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் 35 லட்ச ரூபாய் வீதம் போனஸ் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அங்கிருத்தவரும், ஊழியரும் பெரும் ஆச்சரியத்திலும் இன்ப அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக