Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 12 டிசம்பர், 2019

சென்னையில் எஞ்சினியரிங் மாணவர் தற்கொலை..! ராகிங் விவகாரம் என போலீசார் சந்தேகம்...

 

 

சென்னை திருப்போரூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த கோவில்பட்டி மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை சேட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை கிண்டி ஐஐடி-யில் கேரளா மாணவி ஃபாத்திமா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இரு மாநிலங்களை உலுக்கியது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட பேராசியர்களை சென்னை மத்திய குற்ற பிரிவு தீவிரமாக விசாரணை செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள உள் மாவட்ட கல்லூரிகளிலும் தொடர்ச்சியாக மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் செய்திகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் காதல் விவகாரத்தை காட்டிலும் பேராசியர்களின் பாலியல் சீண்டல் மற்றும் நெருக்கடிகளே காரணமாக உள்ளன.

இந்த நிலையியல் திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு முதலாம் ஆண்டு படித்து வந்த கோவிப்பட்டியைச் சேர்ந்த ஆர். கிஷோர் (18) என்ற மாணவர்
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தனது விடுதி அறையிலேயே தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனுக்கு கல்லூரி வளாகத்தில் ராகிங் தொல்லை கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். அவர்கள் தெரிவித்துள்ளதாவது, கடந்த செவ்வாய் கிழமை அன்று இரவு கிஷோர் உணவு அருந்தவும் கேன்டீனுக்கு செல்லவில்லை. அதனால் அவரது நண்பர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அவரை அழைக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால் கிஷோர் போனை எடுக்காததால் அவர்கள் விடுதிக்கே சென்று பார்த்தனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் விடுதி பொறுப்பாளரை அழைத்து கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது கிஷோர், அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து மாணவர் தற்கொலை செய்துகொண்டதை கோவில்பட்டியில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என கூறினர். வழக்கை பதிவு செய்த போலீசார், மாணவனின் தற்கொலை காரணத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக