எண்கள் சாதாரணமானது இல்லை. ஒவ்வொரு
எண்ணிற்கும் ஒரு மதிப்பு உண்டு. எந்த ஒரு எண்ணையும் இலப்பமாக நினைக்கக் கூடாது.
ஒரு மனிதனுக்கு பிறந்த தேதி மிக முக்கியம். தேதி என்றால் எண்கள் தானே இருக்கும்.
அந்த தேதிகளை வைத்து ஒருவரின் குண நலன்களை அறிந்துக் கொள்ள முடியும்.
7,
16, 25 எண்ணில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்திற்கு உரியவர்கள். ஏழு, வாரத்தின்
ஏழு நாட்களை குறிக்கும். ஜென்மங்கள் ஏழு என்று சொல்லலாம்.
குண நலன்கள் :
தான்
பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொள்வது இவர்களின்
நோக்கமாகும். தெய்வ பக்தியும், ஆன்மீக நாட்டமும் அதிகம் இருக்கும்.
தன்னம்பிக்கையும்,
துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் மனதில் நிறைந்திருக்கும்.
பிடிவாத குணம் அதிகம் இருக்கும்.
கலைத்துறை,
இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். வாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து
முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். உதவி செய்வதில் இவர்களை
மிஞ்ச ஆளில்லை.
கற்பனை
சக்தி அதிகம் பெற்றவர்கள். எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர
ஆலோசித்த பின் தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல்
காப்பாற்றுவார்கள்.
அதிர்ஷ்டக் கல் :
ஏழாம்
எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வைடூரியம் கல்லை அணிந்தால் தீமைகளில் இருந்து
காத்துக் கொள்ளலாம். இந்த வைடூரிய கல்லிற்கு பதிலாக ஒப்பல் என்ற கல்லையும்
அணியலாம். வைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்த கல்லாகும்.
பரிகாரம் :
கேதுவின்
ஆதிக்கத்தில் பிறந்த ஏழாம் எண்ணுக்குரியவர்கள் கேது பகவானுக்கு பரிகாரம் செய்வது,
சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள்
மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும்.
அதிர்ஷ்டம்
தருபவை :
அதிர்ஷ்ட
தேதி - 7,16,25.
அதிர்ஷ்ட
நிறம் - வெள்ளை, காவி.
அதிர்ஷ்ட
திசை - வடமேற்கு.
அதிர்ஷ்ட
கிழமை - திங்கள்.
அதிர்ஷ்ட
கல் - வைடூரியம்.
அதிர்ஷ்ட
தெய்வம் - கணபதி.
கேதுவின்
ஆதிக்கத்தில் பிறந்த தங்களின் பிறந்த எண்ணின் ரகசியத்தை தெரிந்துக் கொண்டு பூஜை
மற்றும் பரிகாரம் செய்வது நற்பலனை அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக