சிரிக்கலாம் வாங்க...!!
மகன் : பல ரோஜாக்களை பறிக்கும்போது
ஒரு முள்ளு குத்தத்தான் செய்யும்.
அப்பா : இப்போ எதுக்குடா இந்த
தத்துவம்?
மகன் : 5 பேப்பர் எழுதினா ஒரு அரியர்
விழத்தான் செய்யும், அத உங்களுக்கு உணர்த்தத்தான்.
அப்பா : 😠😠
------------------------------------------------------------------------------------------------
கணவன் : இன்னைக்கு என் ஃபிரண்ட
லஞ்சுக்கு வரச்சொல்லிருக்கேன்!
மனைவி : என்ன நீங்க, எல்லாம் போட்டது
போட்டபடி கிடக்கு. விருந்து சமையல் வேற எனக்கு அவ்வளவா நல்லா வராது.. இப்ப போய்..
கணவன் : அதுக்காகத்தான் வரச்சொன்னேன்.
கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டான். அது வேண்டாம்னு சொல்றத விட நேரடியா
காமிச்சுரலாம்னுதான் வரச்சொன்னேன்.
மனைவி : 😡😡
------------------------------------------------------------------------------------------------
டாக்டர் : என்ன ஃபேமிலியோட
வந்திருக்கீங்க?
நோயாளி : எனக்கு 3 நாளா ஒரே
காய்ச்சல், என் மனைவிக்கு சுகர், என் பையனுக்கு கால்ல ஆணி, என் பொண்ணுக்கு...
டாக்டர் : நிறுத்துங்க நிறுத்துங்க..
இப்படியெல்லாம் சொல்லி எனக்கு சந்தோஷத்துல ஹார்ட் அட்டாக் வர வச்சுடாதீங்க!
நோயாளி : 😳😳
------------------------------------------------------------------------------------------------
அமலா : நான் புதுசா ஒரு பாட்டு
எழுதினேன்!
விமலா : எதை வெச்சு?
அமலா : பேனாவை வெச்சுதான் எழுதினேன்!
விமலா : 😩😩
------------------------------------------------------------------------------------------------
இது எப்படி இருக்கு?
பல்வலி வந்தால் பல்ல புடுங்கலாம்?
கால்வலி வந்தால் கால புடுங்க
முடியுமா?
இல்ல தலைவலி வந்தால் தலையதான்
புடுங்க முடியுமா?
பில்கேட்ஸ்சோட பையனா இருந்தாலும்...
கழித்தல் கணக்கு போடும்போது
கடன் வாங்கித்தானே ஆகணும்...
கொலுசு போட்டா சத்தம் வரும்...
சத்தம் போட்டா கொலுசு வருமா?
டி நகர் போனா டீ வாங்கலாம்...
விருதுநகர் போனா விருது வாங்க
முடியுமா?
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா திருப்பி அடிக்க
முடியாது...
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான
செல்கள் இருந்தாலும்...
ஒரு செல்லில் கூட
சிம்கார்ட் போட்டு பேச முடியாது..
------------------------------------------------------------------------------------------------
சிறந்த வரிகள்...!
எதற்கும் அஞ்சாதே,
எதையும் வெறுக்காதே,
யாரையும் ஒதுக்காதே !!
உன் பணியை ஊக்கத்துடன் செய்...
பகைமையை அன்பால் வெல்லுங்கள்,
சோம்பலை ஊக்கத்தால் வெல்லுங்கள்...
வெற்றி உங்கள் பக்கம்!!!
அழகு என்பது, சில காலமே நிற்கும்
கொடுங்கோலாட்சி,
அதற்கு நீ அடிமையாகாதே...
எந்த ஒரு காயத்திற்கும் நண்பன்
மருந்தாவான்.
ஆனால் நண்பன் ஏற்படுத்தும்
காயத்திற்கு மருந்தே இல்லை.
நீங்கள் எப்போதும் வாழ்க்கையில் 4
விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள்.
அதாவது,
நம்பிக்கை
சத்தியம்
உறவு
இதயம்
ஏனெனில், இதில் எதையாவது உடைத்தால்
அதிகமாக சத்தம் கேட்காது. ஆனால் வலி அதிகமாக இருக்கும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக