Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 டிசம்பர், 2019

மொக்கை, மொக்கை, மொக்கையோ மொக்கை: கேப்மாரி விமர்சனம் சினிமா விமர்சனம்


யில் பயணத்தின்போது ஜெய் மது அருந்திவிட்டு வைபவி சாண்டில்யாவுடன் உறவு கொள்கிறார். போதையில் இருவரும் தவறு செய்த பிறகு அவரவர் வழியில் செல்கிறார்கள். பின்னர் ஜெய் வைபவியை திருமணம் செய்கிறார்.

திருமணத்திற்கு பிறகு தன்னுடன் வேலை செய்யும் அதுல்யா ரவியுடன் கள்ளத்தொடர்பு வைக்கிறார் ஜெய். அதுல்யாவுடனும் குடிபோதையில் உறவு கொள்கிறார். அதன் பிறகு அவர் வாழ்க்கை என்னவாகிறது என்பதே கதை.

படத்தை பார்த்தவர்கள் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அவர் கெரியரிலேயே இது தான் மிக, மிக மோசமான படம் ஆகும். அடல்ட் ரொமான்டிக் காமெடி என்கிற பெயரில் இன்னொரு இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தை எடுத்துள்ளார் எஸ்.ஏ.சி.

ஜெய் ஆணுறை வாங்க கடைக்கு செல்லும்போது ஒரு பாட்டு வருகிறது. அதை பார்த்து பிறகு கடுப்பாகாமல் இருக்க முடியவில்லை. எந்த காலத்தில் எழுதிய கதையையோ தற்போது படமாக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி. ஹீரோவின் பெயர் விஜய். நல்ல வேளை இந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை. நடித்திருந்தால் அவரால் பல காலம் வெளியே தலை காட்ட முடியாது.

குடிப்பழக்கம் உடல் நலத்திற்கும், குடும்பத்திற்கும் கேடு என்பதை இதைவிட கேவலமாக சொல்ல முடியாது. பீர் அடித்தாலே ஹீரோவுக்கு மூடு வந்துவிடுமாம். அதை பார்க்கும் போது நமக்கு கோபம் தான் பொத்துக் கொண்டு வருகிறது.

வைபவி என்னவென்றால் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் கணவன் ஜெய்யை பிரியாமல் உள்ளார். அதுல்யாவோ அடுத்தவளின் புருஷனுடன் தொடர்பில் இருப்பதை நினைத்து கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை. படத்தில் இரண்டு ஹீரோயின்களின் முகத்தை காட்டியதை விட கால்களை க்ளோசப்பில் காட்டியதே அதிகம்.

இதற்கு பெயர் காதல் இல்லை எஸ்.ஏ.சி. காமம். இப்படி ஒரு படத்தை எடுத்து உங்களின் இத்தனை ஆண்டு கால கெரியருக்கு நீங்களே சூனியம் வைத்துக் கொண்டுள்ளீர்கள். ஜெய் இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளியே வருவாரோ?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக