Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 23 டிசம்பர், 2019

காதலின் வீட்டிற்கு சென்ற காதலி!காதலிக்கு நடந்த கொடூரம்!

காதலின் வீட்டிற்கு சென்ற காதலி!காதலிக்கு நடந்த கொடூரம்!

ந்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூரில் உள்ள மருத்துவமனைக்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் பலத்த தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதன் காரணமாக மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த காவலர்களிடம் அந்த பெண்ணின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.இதன் காரணமாக புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண் கடந்த 18-ம் தன் காதலன் அவளிடம் பேச வேண்டும் என்று தம் வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளான்.இதன் காரணமாக காதலின் வீட்டிற்கு அந்த பெண் சென்றுள்ளார்.
ஆனால் அப்போது வீட்டில் காதலன் இல்லை.அந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் அவரின் சகோதரி இருந்துள்ளன.அவர்கள் அந்த பெண்ணை பலமாக தாக்கி பின்னர் வீட்டில் இருந்த மண்ணெண்ணையால் அந்த பெண்ணை எரித்துள்ளனர்.
இதனால் தான் அந்த பெண்ணிற்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.அந்த பெண்ணின் உடல் சுமார் 80 சதவீதம் எரிந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் அவரின் சகோதரியை தேடிவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக