Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 23 டிசம்பர், 2019

ஹிஜாப்பை அகற்ற சொன்னதால் தங்க பதக்கத்தை வேண்டாமெனக் கூறிய மாணவி.!

ஹிஜாப்பை அகற்ற சொன்னதால் தங்க பதக்கத்தை வேண்டாமெனக் கூறிய மாணவி.!


புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 27-வது பட்டமளிப்பு விழாவில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று சில மாணவர்களுக்கு மட்டுமே பட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதற்கு முன்னதாக விழாவிற்கு வந்த சந்தேகப்படும் வகையில் இருந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்து விசாரித்து மாணவரை மட்டும் உள்ளே அனுப்பினார்கள். இதனால் விழாவில் இருந்து வெளியேற்றப்பட்ட கேரள மாணவி ரபிஹாவை அவரது தலையில் அணிந்து வந்த ஹிஜாப்பை பாதுகாப்பு அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவர் வெளியேற்றப்பட்டார்.
இவர் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டத்தில் தங்க பதக்கம் வென்றவர். குடியரசு தலைவர் புறப்பட்டு சென்ற பின்னரே அந்த மாணவி உள்ளே அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மாணவி ரபிஹாவிற்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த மாணவி மேடையில் பேசுகையில் என்னுடைய போராட்டத்தை வெளிபடுத்தும் விதமாக தங்க பதக்கத்தை ஏற்க மறுத்துள்ளேன் என்று தெரிவித்தார்.
மேலும், CAA மற்றும் NRC எதிராக போராடும் ஒவ்வொருவருக்கும் ஆதரவளிக்கும் விதமாக இந்த பதக்கத்தை மறுத்துள்ளதாகவும் மாணவி ரபிஹா தெரிவித்துள்ளார். இதனால் இந்த சம்பவம் மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!