பெட்ரோல்,
டீசல் போன்றவற்றால் ஏற்படும் மாசினை குறைக்க, ஹுண்டாய் நிறுவனம், மாற்று எரிபொருள்
மூலம் இயங்கும் காரை இந்நிறுவனம் தயாரித்க ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில்,
இந்த நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் காரை அறிமுகம் செய்துள்ளது. அந்த கார்,
மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து, ஹைட்ரஜனால் இயங்கும் காரை
இந்தியாவில் அறிமுகம் செய்ய, இந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இந்த
காருக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து இந்நிறுவனம் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை
தொடங்கியது. இதற்கான முடிவுகள் சாதகமான வந்தால், அடுத்த ஆண்டு இந்தியாவில்
ஹைட்ரஜன் காரை அறிமுகப்படுத்தவுள்ளது. கடந்த ஆண்டு நடந்த வர்த்தக மாநாட்டில், இந்த
கார் காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும்,
இந்த புதிய ஹூண்டாய் நெக்ஸோ காரில் 95kW ஃப்யூவல் செல் பொருத்தப்பட்டுள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின் மோட்டார்கள்
மூலமாக இந்த வகையான கார்கள் இயங்கும் என ஹுண்டாய் நிறுவனம் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக