Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 6 டிசம்பர், 2019

மணல் திருடியதாக கைப்பற்ற லாரி… அதில் டீசல் திருடிய எஸ்.ஐ. !

திருக்கழுக்குன்றம் எஸ்.ஐ. கார்த்திக்கேயன் மணல் திருடியதாகக் கைப்பற்றிய லாரியில் இருந்து பேட்டரி மற்றும் டீசல் திருடியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

கடந்த 3-ம் தேதி பாலாற்றில் மணல் திருடியதாக திருக்கழுக்குன்றத்தில் லாரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அந்த லாரியைக் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லாமல் கிரிவலப்பாதையில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த லாரியில் இருந்து டீசல் மற்றும் பேட்டரி திருடுபோனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அதன் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வு நடத்தியதை அடுத்து  லாரிக் கைப்பற்றப்பட்ட நாளுக்கு மறுநாள் இரவு காரில் வந்த இருவர் லாரியில் இருந்து டீசல் மற்றும் பேட்டரி ஆகியவற்றைத் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. அந்த திருடர்களில் ஒருவர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஐ. கார்த்திகேயன் என்பதும் மற்றொருவர் ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ் உறுப்பினரான முருகன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து  கார்த்திக்கேயன் காஞ்சிபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!