டிலோன், ஒரு மனப்பதட்ட / மனக்கலக்க சீர்குலைவு (anxiety disorder) நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன். பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி ஏனையவர்களுடன் உரையாடுவதற்கு சிரமப்படுவான். இதனால் கல்வியிலும் பிந்தங்கிய நிலையிலேயே இருந்தான்.
கடந்த 2 வருடங்களுக்கு முதல் அவனின் தாய், ஜெசி என்ற பூனைக்குட்டியை அவனிற்கு பரிசாக கொடுத்திருந்தார்.
பூனைக்குட்டியுடன் விளையாட ஆரம்பித்த டிலோனின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின.
பிறந்ததில் இருந்து பெற்றோரைப்பார்த்து “i love you mom / dad” என்ற வார்த்தையை கூட உபயோகிக்காத டிலோன் ‘I love you Jessi-Cat’ என்று சொல்லத்தொடங்கினான்… கோபம், அழுகை, எதிர்பார்ப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தாத அவன் பூனையிடம் உணர்வுகளை வெளிப்படுத்தத்தொடங்கினான்!
தற்போது கல்வி நிலையிலும் மேம்பட்டிருக்கும் அந்தச்சிறுவனை “விசேஷ மாணவன் (கவணிக்கப்பட வேண்டிய மாணவன்)” என்ற நிலையில் இருந்து பள்ளி நிர்வாகம் விலக்கியுள்ளது. :)
விலங்குகளின் அன்பு ஒரு மனிதனின் மன நிலையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்! நம்மை சுற்றி இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த உதவ வேண்டும்…
செல்லப்பிராணிகளின் அருமை தெரிந்தோர் பகிருங்கள் :)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக