Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 டிசம்பர், 2019

ஆதார் அட்டை தொலைஞ்சி போச்சா? பதட்டப்படாதீங்க! உடனே "இதை" செய்யுங்க; அது போதும்!


மீபத்தில் UIDAI அறிமுகம் அறிமுகமான mAadhaar ஆப்பில் சில சுவாரசியமான அம்சங்களை காணமுடிகிறது. அதில் ஒன்று தான் ஆதார் கார்டு ரீபிரிண்ட் விருப்பம்! இதன் நன்மை என்ன? இதை சாத்தியமாக்குவது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்!


இந்திய தனிநபர் அடையாள ஆணையம் (Unique Identification Authority of India - UIDAI) ஆனது சமீபத்தில் அறிமுகமான அதன் புதிய ஆதார் மொபைல் ஆப் ஆன mAadhaar-ஐ அறிமுகம் செய்தது. இந்த புதிய அப்டேட்டின் வழியாக Interface-ல் சில மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டு உள்ளதாகவும், பயனர் டேட்டாவின் தனியுரிமை தொடர்பான சில பாதுகாப்புக் கவலைகளுக்கு தீர்வுகளும் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் UIDAI கூறுகிறது.

இந்த புதுப்பிக்கப்பட்ட mAadhaar ஆப்பில் சில சுவாரசியமான அம்சங்களை காணமுடிகிறது. இந்த புதிய எம்ஆதார் ஆப் ஆனது உங்களின் ஆதார் அட்டையின் soft copy-ஐ சுமந்து செல்ல அனுமதிக்கிறது. அதாவது போகும் இடத்திற்கெல்லாம் ஆதார் அட்டையை கொண்டு செல்வதற்கு பதிலாக, பயனர்கள் தேவைப்படும்போது இந்த அதிகாரப்பூர்வ ஆப்பின் மூலம் ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க முடியும். மேலும், இந்த புதிய ஆப் ஆனது பயனர்கள் தங்களின் முகவரி மாற்றம், ஆஃப்லைன் ஈ.கே.வி.சி, தற்காலிகமாக பயோமெட்ரிக் அங்கீகாரத்தை தடுப்பது போன்ற சில காரியங்களையும் நிகழ்த்த அனுமதிக்கிறது.

எல்லாவற்றிக்கும் மேலாக, புதிய எம்ஆதார் ஆப் ஆனது பயனர்கள் தங்கள் ஆதார் அட்டையை ரீபிரிண்ட் செய்யவும் அனுமதிக்கிறது. எனவே, நீங்கள் உங்களின் ஆதார் அட்டையை இழந்துவிட்டீர்கள் என்றால் அல்லது தொலைந்து போன ஆதார் அட்டைக்கான மாற்று உங்கள் கைகளை வந்து சேரவில்லை என்றால், mAadhaar ஆப் ஆனது நிச்சயமாக உங்களுக்கு கை கொடுக்கும். அதை எப்படி செய்வது என்பது என்பதை பற்றிய தமிழ் சமயத்தின் டிப்ஸ் & ட்ரிக்ஸ் தொகுப்பே இது!

ஆதார் அட்டையை ரீபிரிண்ட் செய்வதற்கு முன்னர் நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டிய சில விடயங்கள் இதோ:

-- உங்கள் ஸ்மார்ட்போனில் MAadhaar ஆப்பின் சமீபத்திய பதிப்பு இருக்க வேண்டும்.
-- இணைய இணைப்பு நன்றாக வேலை செய்ய வேண்டும்.
-- ஆதார் உடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் செயலில் (ஆக்டிவ் ஆக) இருக்க வேண்டும்.
-- 12 இலக்க ஆதார் அட்டை எண் அல்லது விர்ச்சுவல் ஆதார் ஐடி (விஐடி) இருக்க வேண்டும்.

தொலைந்து போன ஆதார் அட்டையை ரீபிரிண்ட் செய்வதற்கான வழிமுறைகள் இதோ:

01. கூகிள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து mAadhaar ஆப்பை பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யவும்.

02. பின்னர் எம்ஆதார் ஆப்பை திறந்து உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்ளமைக்கவும்.

03. பின்னர் ‘Services’ எனும் பிரிவின் கீழ், ‘Order Aadhaar Reprint' எனும் விருப்பத்தை கிளிக் செய்யவும்.

04. பின்னர் காட்சிப்படும் பக்கத்தில் உள்ள ‘Terms & Conditions’ எனும் செக்பாக்ஸை கிளிக்ஸ் செய்து, ‘Okay' என்பதை கிளிக் செய்யவும்.

05. உங்களுக்கான ஆதார் ரீபிரிண்டை பெற, இதிலிருந்து ஒரு விருப்பத்தைத் தேர்வுசெய்க - பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் பதிவு செய்யப்படாத மொபைல் எண்.

நீங்கள் ஏற்கனவே உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்திருந்தால், முதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, captcha உடன் ஆதார் எண் அல்லது மெய்நிகர் ஐடி (விஐடி) எண்ணை உள்ளிட்டு, OTP-க்கான Request-ஐ கிளிக் செய்யவும்.

ஒருவேளை ஆதார் அட்டையுடன் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண் எதுவும் இல்லை என்றால், இரண்டாவது விருப்பத்தை கிளிக் செய்துபின்வரும் விவரங்களை உள்ளிடவும் - ஆதார் எண் / விஐடி, கேப்ட்சா, ஏதேனும் ஆக்டிவ் ஆக உள்ள மொபைல் எண் பின்னர் OTP-க்கான Request-ஐ கிளிக் செய்யவும்.

06. இந்த செயல்முறையை முடிக்க, உங்களுக்கு அனுப்பட்ட OTP ஐ குறிப்பிட்ட இடத்தில் உள்ளிடவும், அவ்வளவுதான்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக