Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 19 டிசம்பர், 2019

வரியைக் குறைக்க முடியுமா முடியாதா? - இந்தியாவைக் கேட்கும் அமெரிக்கா!

மெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் அளவுக்கு அதிகமாக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசு தெரித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்தே இந்தியா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர்ந்து வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு, அமெரிக்காவுக்கான விசா கட்டுப்பாடுகளையும் அமெரிக்க அரசு கடுமையாக்கியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் உள்ளிட்ட பொருட்களுக்கான வரியை அமெரிக்கா அதிகளவு உயர்த்தியுள்ளது.

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய ஏதுவான நாடுகளுக்கான பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது. இதற்குப் பதிலடி தரும் விதமாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதித்தது. இந்நிலையில் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாதான் அதிகமாக வரி விதித்து வருவதாகவும், அதைக் குறைக்க வேண்டும் எனவும் அமெரிக்க வெள்ளை மாளிகை வர்த்தக பொருளாதார ஆலோசகரான பீட்டர் நவேரோ தெரிவித்துள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்துடனான நேர்காணலில் இதுகுறித்து அவர் பேசுகையில், ”இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதிக்கும் வரியை விட அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா 90 சதவீதத்துக்கு மேல் கூடுதலாக வரி விதிக்கிறது. இதுகுறித்து இந்தியாவுடன் நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஒரு ஜோக்காகக் கூறவேண்டுமானால், கட்டணம் விதிப்பதில் மகாராஜா போல் இந்தியா இருக்கிறது. சொல்லப்போனால் உலகின் மற்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. இது கேலிக்குரியதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக