Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 7 டிசம்பர், 2019

ஸ்மார்ட் போன் வாங்கினால் வெங்காயம் இலவசம்...! கடை பெயரை கவனித்தீர்களா?

 

ட்டுக்கோட்டையில் உள்ள மொபைல் கடை ஒன்றில் ஸ்மார்ட்போன் வாங்கினால் வெங்காயம் இலவசம் என வைக்கப்பட்ட பேனர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்று வெங்காயத்தின் விலை எல்லோரும் அறிந்ததே வெங்காயம் வாங்கி வெட்டும்போது கண்ணீர் வந்தகாலம் போய் இன்று வெங்காயம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கண்ணீர் வரும் காலம் வந்துவிட்டது.

நாட்டின் பல பகுதிகளில் 1 கிலோ வெங்காயம் ரூ200க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு மொபைல் கடையில் கடையில் வாசலில் விளம்பரம் ஒன்றை வைத்துள்ளனர். அதன் படி அந்த கடையில் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிலோ வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்த போட்டோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.பலர் இந்த புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் சேர் செய்து வருகின்றனர். வெங்காய விலை அதிகமாக நிலையில் வெங்காயம் குறித்த காமெடிகள் அதிகம் பேசப்பட்டுவரும் ஒருவர் அப்படியான ஒரு காமெடியை நிஜமாகவே செய்திருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!