பஞ்சபட்சி சாஸ்திரம்...!!
'பஞ்ச"
என்றால் 'ஐந்து" என்று பொருள். 'பட்சி" என்றால் 'பறவை" என்று
பொருள். 'சாஸ்திரம்" என்றால் 'எழுதப்பட்டவைகளை செயல்படுத்தி பார்த்தால் உண்மை
விளங்கும்" என்று பொருள்.
பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது மனிதனின் குணநலன்களை
ஐந்து பறவைகளின் குணநலன்களோடு ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உடையது.
27 நட்சத்திரங்களும் ஐந்து பறவைகளுக்குள்
அடக்கப்படுகின்றது. இம்முறையில் ஒருவர் பிறக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில்
அவருக்கான பறவை தீர்மானிக்கப்படுகிறது.
பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது குருவழியாக சீடர்கள்
அறிந்து கொள்ளும் வகையில் கூறப்பட்டது ஆகும்.
பஞ்சபட்சி சாஸ்திர குறியீடு ஐந்து பறவைகளை
வைத்து உருவாக்கப்பட்டது.
அந்த வகையில் நாம் இன்று பஞ்சபட்சி
சாஸ்திரத்தில் என்னென்ன காரியங்களை செய்யலாம்? என்பதை பற்றி விரிவாகப்
பார்க்கலாம்.
பஞ்சபட்சி
சாஸ்திரத்தின் உதவியுடன் என்ன காரியங்கள் செய்யலாம்?
நோய்களை நீக்குவதற்கான சிகிச்சைகளை
மேற்கொள்ளுதல்.
மனதில் எண்ணிய ஆசைகளை நிறைவேற்றுவதற்கான
முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
எதிர்ப்புகளை தகர்த்தெரிவதற்கான முயற்சிகளை
மேற்கொள்ளுதல்.
கிரகதோஷங்களுக்கான பரிகாரங்களை செய்தல்.
சுபக்காரியங்களுக்கு நல்ல நேரம்
தேர்ந்தெடுத்தல்.
போட்டிகளில் வெற்றியடைவதற்கான முயற்சிகளை
மேற்கொள்ளுதல்.
ஆருட
முறையில் பலன் கூறுதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக