தற்கொலை
முனை சுற்றுலாத் தலம் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து 6கி.மீ
தொலைவிலும், வத்தலகுண்டில் இருந்து 65கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
தற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு மிகவும் ஆழமான
பள்ளத்தாக்கு.
இந்த பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது.
கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 7கி.மீ.
தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம்.
வைகை அணையை இங்கு இருந்தே கண்டுகளிக்கலாம்.
இங்கு சுற்றித் திரியும் ஏராளமான குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை
கவர்ந்திழுக்கிறது.
முனையின் உச்சிக்கு படிகள் வழியாக ஏறிச் செல்ல
வேண்டும்.
போகிற
வழியில் இரண்டு பக்கமும் கடைகள் சூழ்ந்திருக்கும்.
காலை
10 மணி முதல் மதியம் 3 மணி வரையே இவ்விடத்தை பார்க்க உகந்த நேரம். இயற்கை அழகை
ரசித்து ஓய்வெடுக்க இது நல்ல ஸ்தலமாகும்.
எப்படி செல்வது?
திண்டுக்கல், மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், பழநி
ஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில் பேருந்துகள்
இயக்கப்படுகின்றன.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
இதர சுற்றுலாத் தலங்கள் :
குணா குகைகள்
தொப்பித் தூக்கிப் பாறைகள்
மதி கெட்டான் சோலை
டால்பின் மூக்கு பாறை
செண்பகனூர் அருங்காட்சியகம்
பேரிஜம் ஏரி
அமைதி பள்ளத்தாக்கு
செட்டியார்
பூங்கா
படகுத்
துறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக