பிறந்த எண்களிலுள்ள சில ரகசியம்(1, 10, 19, 28)ல் பிறந்தவர்களின் ரகசியம்
குண அமைப்பு :
✴ 1ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சூரியன் எப்படி உலகிற்கு ஆதாரமாக விளங்கி ஒளி தருகின்றதோ, அதுபோல பலருக்கும் நன்மை செய்து வாழ்வார்கள். தைரியமும், வீரமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவர்கள், அன்பும், பண்பும், மரியாதையும், தெய்வ பக்தியும் தர்ம குணமும் அதிகம் இருக்கும்.
✴ தீர்மானமான கருத்துக்களை கொண்டவராகவும் நல்ல உழைப்பாளியாகவும் இருப்பர். முன்கோபம் அதிகம் இருந்தாலும் அது நியாயத்திற்காகவே இருக்கும். கள்ளம் கபடமின்றி எல்லா காரியங்களையும் துணிந்து செயல்படுத்துவதால் இவர்களுக்கு விரோதிகளும் அதிகம் உண்டு.
✴ தன்னிடம் தவறு இருந்தால் மன்னிப்பு கேட்பார்கள். பிறருடைய தவறுகளையும் தனக்கு கீழ்படிந்தால் மன்னிக்கக் கூடியவர்கள். இராஜ தந்திரத்தை கையாள்வதில் திறமை பெற்றவர்கள். எதிலும் தனித்து நின்று போராடி வெற்றி பெறுவார்கள். தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வார்கள். அதிக பேச்சுத் திறமை உண்டு.
அதிர்ஷ்ட கல் :
✴ சூரியனின் ஆதிக்கமான எண் 1ல் பிறந்தவர்கள் அதிர்ஷ்ட கல்லாக மாணிக்கத்தை செப்பு உலோகத்தில் பதித்து அணிய வேண்டும். இந்த அதிர்ஷ்ட கல்லை அணிவதன் மூலம் மனோதைரியம், சாந்தமான குணம், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி போன்ற நற்பலன்கள் உண்டாகும். உஷ்ணம் சம்மந்தப்பட்ட நோய்கள், கண்நோய் போன்றவை விலகும்.
பரிகாரங்கள் :
✴ ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது, சிவ வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.
அதிர்ஷ்டம் தருபவை :
✴ அதிர்ஷ்ட தேதி - 1, 10, 19, 28
✴ அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு, மஞ்சள்
✴ அதிர்ஷ்ட திசை - கிழக்கு
✴ அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு
✴ அதிர்ஷ்ட கல் - மாணிக்கம்
✴ அதிர்ஷ்ட தெய்வம் - சிவன்
1ஆம் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த எண்களிலுள்ள ரகசியங்களை அறிந்து கொண்டு பரிகாரம் மற்றும் பூஜைகள் செய்தால் அனைத்தும் வெற்றிகளாகவே அமையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக