Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 16 டிசம்பர், 2019

இனி கணினியில் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பலாம்..! அதை எப்படி செய்யலாம்?

இனி கணினியில் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பலாம்..! அதை எப்படி செய்யலாம்?

பேஸ்புக்கை தவிர்த்து, மக்கள் அதிமாக உபயோகிக்கும் செயலி, இன்ஸ்டாகிராம். இந்த செயலி மூலம் பலரும் தங்களின் புகைப்படங்கள், செய்திகள், வேடிக்கை விடீயோக்கள், என பலவற்றையும் பதிவு செய்து வந்தனர். இதுமட்டுமின்றி, இதில் டிஎம் (DM) என்ற சேவை உள்ளது. இந்த சேவை மூலம் நாம் நமது நண்பர்களுடன் சாட் செய்யலாம்.

மேலும் இதன்மூலம் நமது நண்பர்களுக்கு புகைப்படம், வீடியோ, போன்றவற்றையும் அனுப்பலாம். இந்த செயலீக்கான வலைப்பக்கமும் உள்ளது. மொபைலில் உள்ள சில அம்சங்கள் கிடையாது. அதாவது, வலைத்தளத்தில் ஸ்ரோல் செய்து பார்ப்பது, படங்கள் மற்றும் விடீயோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் மட்டுமே செய்ய முடியும்.புகைப்படம் மற்றும் ஸ்டோரீஸ்ஐ அப்ளோடு செய்ய முடியாது. ஆனால், நமது நண்பர்களுடன் சாட் செய்யலாம்.

எப்படி இதை ஓபன் செய்யலாம்:
1. முதலில் குரோம்ஐ உங்கள் கணினி அல்லது லேப்டாப்  ஓபன் செய்யுங்கள்.
2. அதில், குரோம் வெப் ஸ்டார் (chrome web store) என சர்ச் செய்யுங்கள்.
3. அதை ஓபன் செய்து, அதில் உள்ள சர்ச் பாரில் Insta direct என டைப் செய்யுங்கள்.
4. அதன்பின், அதில் ஆட் டு குரோம்ஐ (add to chrome) கொடுங்கள்.
5. கொடுத்தபின் அதில் ஒரு பாக்ஸ் வரும். அதில் “ஆட் எஸ்டென்ஷன்” என கொடுத்தால் அது உங்களின் கிரோமின் டாஸ்க் பாரில் அட் ஆகும்.

அதன்பின், ஓபன் செய்து உங்களின் இன்ஸ்டாகிராம் அகவுண்டை லாகின் செய்யவும். செய்தவுடன், உங்களின் இன்ஸ்டாகிராம் டிஎம் ஓபன் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக