>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 17 டிசம்பர், 2019

    கடன்.!

     Image result for கடன்
    ன்பு ஒரு நாள் ஒரு பெரிய பணக்காரரிடம் சென்றார். ஒரு மனிதனுடைய கஷ்ட நிலைக்கண்டு மனம் தாங்காமல் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு பணக்காரரிடம் கொஞ்சம் பணத்தை கடனாக வாங்கிவிட்டார் அது இப்பொழுது வட்டிக்கு வட்டியெனக் கூடி இன்று அந்த தொகையினைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் திணறுகிறார்.
     அவர் தற்கொலை செய்து விடுவாரோ என்று கூட எனக்கு பயமாக இருக்கின்றது. நீங்கள் ஒரு ஆயிரம் பொற்காசுகள் அந்த மனிதனுக்கு அவரின் கடனை அடைப்பதற்கு கொடுத்தால் அவர் உரிய காலத்தில் அதைத் திருப்பிக் கொடுத்து விடுவார்.
     அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன் என்று அன்பு மிகவும் உருக்கமாகக் கூறினார். அதைக்கேட்டு மனம் உருகிய செல்வந்தர் அன்புவிடம் ஆயிரம் பொற்காசுகளை கொடுத்து அவ்வளவு கஷ்டப்படும் மனிதன் யார்? என்று கேட்டார். வேறு யாருமல்ல நான்தான் என்று கூறி சிரித்தவாறு அன்பு சென்று விட்டார்.
     இரண்டு மாதங்கள் கழித்து அன்பு அப்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டார். சில மாதங்கள் கழிந்த பின்பு மீண்டும் ஒருநாள் அன்பு அப்பணக்காரரிடம் வந்தார். யாரோ ஒருவர் பணம் வாங்கிக் கஷ்டப்படுகின்றாரா, அதை என்னிடம் வாங்கிக் கொடுக்க வந்தீரோ? என்றார் செல்வந்தர். அதற்கு அன்பு ஆமாம் என்றார்.
     அந்தக் கஷ்டப்படும் மனிதர் நீர்தானே என்று செல்வந்தர் கேட்டார். இல்லை உண்மையிலேயே ஒரு ஏழைதான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகின்றார் என்றார் அன்பு. உம்மை எவ்வாறு நம்புவது பணத்தை வாங்கிய பின் நான்தான் அந்த ஏழை என்று கூறமாட்டீர் என்பதற்கு என்ன நிச்சயம்? என்று செல்வந்தர் கேட்டார்.
     நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள் என்று தெரிந்துதான் அந்த மனிதரை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறேன் என்றார் அன்பு.
     பிறகு வாசல் பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார். நீர்தான் கடன் வாங்கி கஷ்டப்படும் ஏழையா? என்று கேட்டார் செல்வந்தர். ஆமாம் என்று அந்த ஏழை பதில் சொன்னார். செல்வந்தர் அன்பு சொன்ன தொகையினை ஏழையிடம் நீட்டினார்.
     அதனை அன்பு கை நீட்டி வாங்கிக்கொண்டார். என்ன பணத்தை நீர் வாங்குகிறீர் பழையபடி என்னை ஏமாற்றுகிறீரா? என செல்வந்தர் கேட்டார். நான் பொய் சொல்ல வில்லையே கடன்வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் கடன் கொடுத்தவன் நான் என்று கூறினார். கொடுத்த கடனை இப்பொழுது வசூல் செய்கிறேன் என்று கூறியவாறு ஏழையை அழைத்துக்கொண்டு அன்பு நடந்தார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக