திருக்கச்சியேகம்பம் - எனப் பழைய சமய
நூல்களில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பாடல் பெற்ற தலங்களுள்
ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத
தலங்களில் ஒன்றாகும்.
அதிசயங்கள்
:
மூலவர் : ஏகாம்பரநாதர்
அம்மன் : காமாட்சி
தல விருட்சம் : மாமரம்
பழமை : 1000 - 2000 ஆண்டுகள்
தல
வரலாறு :
கைலாயத்தில் சிவன் யாகத்தில் இருந்தபோது,
அம்பாள் அவரது இரண்டு கண்களையும் விளையாட்டாக தன் கைகளால் மூடினாள். இதனால்
கிரகங்கள் இயங்கவில்லை. சூரியனும் உதிக்கவில்லை. உலகம் இருண்டு நின்றது. தவறு
செய்துவிட்டதை உணர்ந்த அம்பாள் சிவனிடம், தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவரோ
செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என்றார்.
பூலோகத்தில் தன்னை எண்ணி தவம் செய்து வழிபட
விமோசனம் கிடைக்கும் என்றார். அம்பாள் தவம் செய்ய ஏற்ற இடத்தை கேட்க,
இத்தலத்திற்கு அனுப்பினார்.
இங்கு வந்த அம்பாள் ஒரு மாமரத்தின் அடியில்
மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து பஞ்ச அக்னியின் மத்தியில் நின்றபடி தவம்
செய்தாள். அவளது தவத்தை சோதிக்க எண்ணிய சிவன் தன் தலையில் குடிகொண்டிருக்கும்
கங்கையை பூமியில் ஓடவிட்டார்.
கங்கை வெள்ளமாக பாய்ந்துவர தான் பிடித்து வைத்த
லிங்கம் கரைந்துவிடும் என அஞ்சிய அம்பாள் லிங்கத்தை மார்போடு அணைத்துக் கொண்டு
காத்தாள். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவன் அவளுக்கு காட்சி தந்து பாவத்தை
மன்னித்தருளி, திருமணம் செய்துகொண்டார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு
தழுவக்குழைந்த நாதர் என்ற பெயரும் இருக்கிறது.
தலச்
சிறப்பு :
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில்
உள்ளது.
தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின்
மீது சூரிய ஒளி விழுகிறது.
ஒற்றை மாமரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு
முந்தையது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத்தெய்வீக மாமரம் இனிப்பு,
புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது.
பிராத்தனை
:
திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இத்தலத்து
பக்தர்களின் முக்கிய பிரார்த்தனை ஆகும்.
இத்தலத்து சிவபெருமானை வணங்கினால்
முக்தி கிடைக்கும். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள
ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக