பேரிஜம் ஏரி (Berijam Lake) கொடைக்கானலில் உள்ள மோயர்முனைப் பகுதியிலிருந்து 13கி.மீ தொலைவிலும், கொடைக்கானல் ஏரியிலிருந்து 23கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
24கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட பேரிஜம் ஏரியின் தண்ணீர், தேனி மாவட்டம், பெரியகுளம் மக்களின் குடிநீராகப் பயன்படுகிறது.
பேரிஜம் ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய நன்னீர் ஏரியில் 2ஆவது இடத்தை பெற்றுள்ளது.
பேரிஜம் செல்லும் வழியில் உள்ள மதிக்கெட்டான் சோலையில், வனத்துறையின் அனுமதியுடன் மலையேறும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஏரி காட்டிற்குள் உள்ளதால் உள்ளே செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரையே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும்.
இப்பகுதியில் அதிகமான மூலிகைச் செடிகளும், சிறுத்தை, செந்நாய், காட்டு மாடு, மலைப் பன்றி, மான், காட்டுக்கோழி போன்ற காட்டு உயிரினங்களும் உள்ளன.
நெருப்பு கோபுரம், அமைதி பள்ளத்தாக்கு மற்றும் மருத்துவ காடு ஆகிய தலங்கள் இந்த ஏரியின் அருகில் இருப்பது இவ்விடத்திற்கு கூடுதல் ஈர்ப்பாக அமைந்துள்ளது.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
இதர சுற்றுலாத் தலங்கள் :
குணா குகைகள்
தொப்பித் தூக்கிப் பாறைகள்
மதிக்கெட்டான் சோலை
செண்பகனூர் அருங்காட்சியகம்
டால்பின் நோஸ் பாறை
அமைதி பள்ளத்தாக்கு
செட்டியார் பூங்கா
படகுத் துறை
தற்கொலை முனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக