Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 டிசம்பர், 2019

பொறுமைக்கு கிடைத்த பரிசு..!!

 Image result for பொறுமைக்கு கிடைத்த பரிசு..!!
புத்தூர் என்ற ஊரில் தொடர்ந்து சில காலமாகவே மழையே பெய்யவில்லை. அதனால் அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் அனைவரும் பசியால் வாடினார்கள். ஒரு நாள் அந்த ஊர் மக்கள் அனைவரும் நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் சென்றனர்.
ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் எங்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டினர்.
இளகிய உள்ளம் படைத்திருந்த செல்வந்தர், இந்த ஊரில் உள்ள குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து ரொட்டியை எடுத்து செல்ல சொல்லுங்கள்! என்றார் செல்வந்தர்.
மாளிகை திரும்பிய செல்வந்தர், தன் வேலைக்காரனை அழைத்தார். இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு ரொட்டி கிடைக்க வேண்டும். நாளையிலிருந்து ரொட்டிகளை கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு என்றார்.
மறுநாள், ரொட்டியுடன் வேலைக்காரன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனை சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் வேலைக்காரன்.
ஒவ்வொருவரும் பெரிய ரொட்டியை எடுப்பதில் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்து சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அந்த சிறுமி.
இப்படியே தொடர்ந்து மூன்று நாட்கள் நிகழ்ந்தது. செல்வந்தர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார். நான்காம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய ரொட்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. வீட்டிற்கு வந்து தன் தாயிடம் ரொட்டியை தந்தாள். அந்த தாய் ரொட்டியைப் பிய்த்தாள். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.
அந்த தங்கக்காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. ஐயா! இது உங்கள் தங்கக்காசு. நான் எடுத்துச்சென்ற ரொட்டிக்குள் இருந்தது பெற்றுக் கொள்ளுங்கள்! என்றாள் சிறுமி. மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் தாரணி எனக் கூறினாள்.
மகளே! உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்த தங்கக்காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல் என்றார் அந்த செல்வந்தர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த சிறுமி, நடந்ததை தன் தாயிடம் கூறி மகிழ்ந்தாள்.
தத்துவம் :
நீங்களும் இவ்வுலகில் பொறுமையுடனும், நேர்மையுடனும் இருந்தால் பெரியோர்களின் பரிசுகளை பெற்று நலமுடன் வாழலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!