சிரியா அரசாங்கத்தால் நடத்தப்படும்
எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களை குறிவைத்து அடையாளம் தெரியாத ட்ரோன்களால்
தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் சிரியா கடுமையான எரிசக்தி ஆற்றல்
பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
இந்த
"பயங்கரவாத" தாக்குதல்கள் ஹோம்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு உற்பத்தி
நிலையத்தையும், மத்திய ஹோம்ஸ் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு இயற்கை
எரிவாயு வயல்களையும் சேதப்படுத்தியதாக எண்ணெய் அமைச்சகம் கூறியுள்ளது என நேற்று
(சனிக்கிழமை) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தீயணைப்பு
வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாகவும், எண்ணெய் வயல்களை
பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தை
தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகளுக்கான போர் கண்காணிப்பகமும் தாக்குதல்களை
உறுதிப்படுத்தியது.
ஹோம்ஸ்
நகரமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் 2017 முதல் சிரிய அரசாங்கத்தின்
கட்டுப்பாட்டில் உள்ளன. இருப்பினும் கிளர்ச்சியாளர்கள் ஜோர்டானின் எல்லைக்கு
அருகிலுள்ள மாகாணத்தின் சில பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மேற்கத்திய
பொருளாதாரத் தடைகள் மற்றும் குர்திஷ் தலைமையிலான போராளிகள் நாட்டின் பெரும்பாலான
எண்ணெய் வயல்களைக் கட்டுப்படுத்துவதன் மத்தியில் சிரியா கடுமையான எரிபொருள்
பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
மனித
உரிமை மீறல் காரணமாக சிரியா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள்
விதித்துள்ளன. இதன் காரணமாக 2018 அக்டோபருக்குப் பிறகு சிரியாவுக்குள் வரும்
எண்ணெய் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக எண்ணெய் பற்றாக்குறை நிலவி
வருகிறது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக