ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிறுநீர்
கழிக்கும் இடத்தில் குழந்தை புதைக்கப்பட்டதை அறிந்து, ஊர் மக்கள் அதை மீட்டு மருத்துவமனையில்
சேர்த்தனர். எனினும், குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாடேரு வனப்பகுதியில்
வசமாமிடி என்ற மலைக் கிராமம் ஒன்று உள்ளது. இந்த வசமாமிடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஒருவர்,
ஊருக்கு வெளியில் உள்ள புதர் ஒன்றில் சிறுநீர் கழிக்கச் சென்றார்.
அப்போது அந்த பகுதியில் குழந்தை ஒன்றின் அழுகை சத்தம் கேட்டது. இதையடுத்து, குழந்தை அழுகை சத்தம் வந்த இடத்தை நோக்கி அந்த நபர் சென்று பார்த்துள்ளார். சத்தம் வந்த இடத்தில் மண் மூடப்பட்டிருந்தது.
அதிர்ந்துபோன அந்த நபர், விரைந்து சென்று பார்த்தபோது, பச்சிளம் குழந்தை ஒன்றை மர்ம நபர் ஒருவர் உயிரோடு குழி தோண்டி புதைக்க முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த காட்சியைக் கண்டு என்ன செய்வதென அறியாத அந்த நபர், அக்கம் பக்கத்தில் சென்றவர்களிடம் சம்பவத்தைக் கூறி, உதவிக்கு அழைத்துள்ளார்.

மக்கள் பலர் ஒன்றுகூடி, குழந்தையை மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தை வைக்கப்பட்டிருந்தது.
மருத்துவர்கள் குழந்தையின் உயிரை பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டபோதும், மண் மூடி கடுமையாகப் பாதிப்படைந்திருந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது.
குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தீவிர விசாரணையைத் தொடக்கியுள்ளனர். மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டபோது, குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது.
|
|
|||
|
|
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக