2020ஆம் ஆண்டில் இந்தியாவில் ஊழியர்களுக்கான சம்பளம் 9.2 சதவீதம் வரையில் உயரும் என்று சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளில் ஊதிய உயர்வு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து
கோர்ன் ஃபெரி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் 130க்கும்
மேற்பட்ட நாடுகளில் 25,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 2 கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்களிடம்
இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ஊழியர்களின்
சம்பளம் 9.2 சதவீதம் உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ஆசிய நாடுகளிலேயே மிகப்
பெரிய அளவாகும்.
இந்தியர்களின் சம்பளம் உயரும் என்று மதிப்பிடப்பட்டிருந்தாலும், அது சென்ற ஆண்டு வளர்ச்சியை விடக் குறைவாகவே இருக்கிறது. சென்ற ஆண்டில் ஊதிய வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது. 2020ஆம் ஆண்டுக்கான ஊதிய வளர்ச்சியில் உண்மை ஊதிய வளர்ச்சி வெறும் 5 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை ஊதியம் என்பது விலைவாசி உயர்வுக்கேற்ற சம்பள உயர்வை அடிப்படையாகக் கொண்டதாகும். பணவீக்கம் அதிகமாக இருப்பதால் உண்மை ஊதிய வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. சர்வதேச அளவிலான ஊதிய உயர்வைப் பொறுத்தவரையில், 2020ஆம் ஆண்டில் 4.9 சதவீத ஊதிய வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச அளவிலான பணவீக்க விகிதம் 2.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உண்மை ஊதிய வளர்ச்சி வெறும் 2.1 சதவீதமாக மட்டுமே இருக்கும் எனவும், உலக நாடுகளிலேயே ஆசியாவில்தான் உண்மை ஊதிய வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளிலேயே மிகவும் குறைவாக, ஜப்பானில் 2 சதவீதமாகவும், தைவானில் 3.9 சதவீதமாகவும் ஊதிய வளர்ச்சி இருக்கும் என்று இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக