Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 டிசம்பர், 2019

ஒரு மகிழ்ச்சி செய்தி: :"கூகுள் பே"ல் இனி தங்க பரிசு ஆப்ஷன் அறிமுகம்!


 சமீபத்திய விலையில் தங்கம் வாங்கலாம்


கூகுள் பே, தற்போது அத்தியாவசியா அப்ளிகேஷனாக மாறி வருகிறது. வெளியூர் மற்றும் பிற பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு கூகுள் பே, மிகவும் உதவியாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல. அதேபோல் அக்கவுண்டில் இருந்து 1 ரூபாய் முதல் லிமிட்டுக்கேற்ப எத்தனை ரூபாய் வேண்டுமானாலும் தொலைபேசி எண் வழியாக பகிர்ந்து கொள்ளலாம்.
 
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

இதில் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்ற வார்த்தை நாம் எங்கேயாவது கேள்விபட்டால் உடனடியாக நினைவுக்கு வருவது கூகுள் பே தான். இதன் மூலம் ஒருவருக்கு பணம் அனுப்புகையில் நமக்கு ஸ்கிராட்ச் கார்டு பரிசாக கிடைக்கும். இதை சுரண்டுகையில் பெரும்பாலான நேரம் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்றே காண்பிக்கு அல்லது சில்லரை காசுகள் மட்டுமே கிடைக்கும்.

தங்கம் விற்பனை மற்றும் வாங்கும் திட்டம்

கூகுள் பே-ன் அடுத்தக்கட்டமாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் ஆப் செயலியின் மூலம் தங்கம் விற்பனை மற்றும் வாங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்திற்காக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உலோக மற்றும் சுரங்க சேவையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டது.

தங்க பரிசளிப்பு விருப்பம் குறியீடு

இந்த நிலையில் கூகுள் பே செயலியில் தங்க பரிசளிப்பு விருப்பம் குறியீட்டுகள் காணப்படுகிறது. இந்த குறியீடானது, அடுத்தக்கட்ட டெவலப்பர்களில் தங்க பரிசு விருப்பம் என்ற குறியீடு கண்டறியப்பட்டுள்ளது. இந்த குறியீட்டின் மூலம் ஒருவருக்கொருவர் தங்கத்தை பரிசளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

99.99 சதவீதம், 24 கேரட் தங்கம்

கடந்த ஏப்ரல் மாதத்தில் செயலியின் வழியாக தங்கம் வாங்குவது மற்றும் விற்பது குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலமாக கூகுள் பே பயணர்கள் 99.99 சதவீதம், 24 கேரட் தங்கத்தை வாங்க உதவுகிறது. அதேபோல் ஷேர் மார்க்கெட் போல், பணம் செலுத்தி தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம். நாம் வாங்கும் தங்கம் உலோக மற்றும் சுரங்க சேவை மையத்தால் பாதுகாப்பான பெட்டகங்களில் சேமிக்கப்படும்.

சமீபத்திய விலையில் தங்கம் வாங்கலாம்

கூகுள் பே-ல் காண்பிக்கப்படுவது போல், பயனர்கள் எந்த நேரத்திலும் தங்கத்தை அப்போதைய விலையில் வாங்கலாம், இந்த நிலையில் தற்போதுமுதல் கூகுள் பே பயனர்கள் பணம் செலுத்தி தங்களுக்கு விருப்பப்பட்டவர்களுக்கு தங்கத்தை பரிசாக வழங்கலாம்.

பன்மடங்கு முன்னேறியுள்ள கூகுள் பே

கூகுள் பே செயலியை பொருத்தவரை போன் பே-யை விட 67 மில்லியன் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களை கொண்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதேபோல் முந்தைய 12 மாதங்களில் மட்டும் 110 பில்லியன் டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளோடும், நூறாயிரக்கணக்கான ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வணிகர்கள் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக