கோவை
உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர்
உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில்
இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மழை நீர்
தேங்கியுள்ளது.மக்கள் இதனால் அவதியுற்று வருகின்றனர்.கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையம் நடுநீர் பகுதியில் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து
விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இடிபாட்டில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர்.மேலும் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையினில் கோவை மேட்டுப்பாளையத்தில் வீடுகள் இடிந்து உயிரிழந்த 15 பேரின்
குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.குரு,ஹரிசுதா,ராம்நாதன்,அட்சயா,லோகுராம்,ஒவியம்மாள்,நதியா,சிவகாமி,நிவேதா,வைதேகி,ஆனந்தகுமார்,திலாகவதி,அருக்கணி,ரூக்குமணி,சின்னமாள்
உள்ளிட்டோருக்கு நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக