Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 2 டிசம்பர், 2019

ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து சியோமி அறிமுகம் செய்த புதிய மின்சார பைக்..!

ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் முத்திரை பதித்த சியோமி (xiaomi) நிறுவனம் அடக்கமான வகையில் புதிய மினி மின்சார பைக்கை அறிமுகம் செய்துள்ளது.


சீனாவைச் சேர்ந்த சியோமி நிறுவனம் தயாரித்து வரும் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மலிவான விலையும், பல உயர் ரக தொழில்நுட்பங்களுடன் போன்கள் தயாரிக்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் சியோமி நிறுவனத்திற்கு ஆதரவு குவிந்து வருகிறது.

இதை உணர்ந்து கொண்ட சியோமி, ஸ்மார்ட்போன்களை தவிர்த்து பல்வேறு துறைகளில் கால் பதித்து வருகிறது. எலெக்ட்ரானிக் உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், எலெக்ட்ரானிக் அணிகலன்கள் என சியோமி தயாரிக்கும் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரவேற்பு இருந்து வருகிறது.

தற்போது அந்நிறுவனம் ஆட்டோத்துறையில் கால்பதித்துள்ளது. நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்கேற்றவாறு திட்டங்களை வகுத்து, நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

மின்சார வாகன உற்பத்திக்கு வழங்கப்படும் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, எரிபொருள் வாகன தயாரிப்பில் முன்னிலை வகித்து வரும் நிறுவனங்களும் எலெக்ட்ரானிக் வாகன தயாரிப்பில் ஈடுபாடு காட்டி வருகின்றன.

முன்னணி வாகன நிறுவனங்கள் மட்டுமில்லால், எலெக்ட்ரானிக் வாகன உற்பத்திக்காகவே பிரத்யேகமாக இயங்கும் விதத்தில் பல புதிய நிறுவனங்கள் கால்பதித்து வருகின்றன. அதில் ஏத்தர் நிறுவனம் முதன்மையான இடத்தை வகித்து வருகிறது.

இந்நிலையில், சியோமி நிறுவனமும் முதற்கட்டமாக மின்சார வாகன உற்பத்தியில் கால்பதித்துள்ளது. அதன்படி அந்நிறுவனம் தயாரித்துள்ள மின்சார வாகனத்திற்கு ஹிமோ எச்1  என பெயரிடப்பட்டுள்ளது.
 
மின்சார ஆற்றலில் இயங்கும் சிறியரக மின பைக் வடிவத்தில் இந்த வாகனம் காட்சியளிக்கிறது. இதனை சாலைகளில் பயன்படுத்த முடியாது. அதற்கு பதிலாக வணிக வளாகங்கள், பூங்கா பகுதிகள் போன்ற இடங்களில் இயக்க முடியும். அதற்கு ஏற்றவாறான சிறப்பம்சங்களுடன் ஹிமோ எச்1 பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.

சிறிய வகையிலான இருக்கை, தேவைக்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்யும் வசதி பெற்ற ஹேண்டில்பார், எல்.இ.டி திறனில் ஒளிரும் விளக்கு, வாட்டர் ஃப்ரூப் வசதி பெற்ற டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் உள்ளன. இந்த பைக்கில் இருக்கும் 7.5Ah பேட்டரியை 4 மணிநேரம் முதல் 5 மணிநேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிடலாம்.

மொத்தமாக 15 கிலோ எடைக்கொண்ட சியோமி எச்1 எலெக்ட்ரிக் பைக்கில், அதிகப்பட்சமாக 75 கிலோ எடை கொண்டவர்கள் வரை பயணிக்க முடியும். இந்த பைக் முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 30 கி.மீ தூரம் வரை செல்லும்.

போர்டபிள் மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கை கையடகத்தில் எளிதாக மடக்கி வைத்து கொள்ளலாம். இதை மடக்கி வைக்க சில விநாடிகளே போதுமானது. இந்த பைக்கிற்கு சிறப்பான லாக்கிங் வசதி உள்ளது.

இதனுடைய இருக்கை சிறியளவில் இருந்தாலும், ரைடர் அமர்ந்து செல்வதற்கு ஏற்ற விதமாக இருக்கும். இதனுடைய புட் ரெஸ்ட், பைக்கின் பெடல் போல செயல்படும். ஆதலால் இது மின்சார சைக்கிள் எனவும் ஷாமி நிறுவனம் குறிப்பிடுகிறது.

இந்தியாவில் சியோமி ஹிமோ எச்1 மின்சார பைக்கிற்கு ரூ. 30,500 (எக்ஸ்-ஷோரூம், இந்தியா) விலை நிர்ணம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு சீனாவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த மினி எலெக்ட்ரிக் பைக்கை ஆன்லைன் மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

எனினும், ஆன்லைன் விற்பனைக்கான வரி உள்ளிட்டவற்றுடன் ஹிமோ எச்1 மின்சார பைக்கிற்கான விலையில் மாறுபாடு இருக்கும். அலுவலகத்தில் இருந்தவாறே போக்குவரத்து பயன்பாட்டை விரும்புவோர்கள், இந்த பைக்கை பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக