Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 16 டிசம்பர், 2019

ஆளுங்கட்சி எனக்கு எதிராக செயல்படுகிறது”..ஐ.நாவில் புகார் அளித்த நித்தி..

ளும் கட்சி, எதிர்கட்சி, மாநிலக்கட்சி ஆகிய அனைத்து தரப்பினரும் தமக்கு எதிராக செயல்படுவதாக ஐநா மனித உரிமை ஆணையத்தில் நித்யானந்தா புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நித்யானந்தா மீது பாலியல் வழக்கு, குழந்தை கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் போடப்பட்ட நிலையில், அவர் திடீரென தலைமறைவானார். பின்பு நித்யானந்தா ஈகுவேட்டர் நாட்டில் ஒரு தீவை வாங்கி, அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்தன.
மேலும் நித்யானந்தா பேசும் பல வீடியோக்களும் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

இதனிடையே நித்தியானந்தாவை 18 ஆம் தேதிக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என பெங்களூர் நீதிமன்றம் கர்நாடகா போலீஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் நித்யானந்தா ஐ.நா. மனித உரிமை கழகத்திற்கு அவர் கடந்த ஆண்டு ஒரு புகார் கடிதம் எழுதியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

அதில், பாஜக உள்ளிட்ட பிற இந்து அமைப்புகள், சிறுபான்மையினரான ஆதி சைவ மதத்தினரை அச்சுறுத்துவதாகவும், திமுக, அதிமுக, உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளும் உளவியல் ரீதியாக தங்களை துன்புறுத்தவதாக அந்த கடிதத்தில் நித்யானந்தா எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 9 பாலினங்களையும், ஓரின சேர்க்கையையும், பெண் உரிமைகளையும் ஆதி சைவ மதம் ஆதரிப்பதாகவும், பாஜக அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களை தாக்குகின்றனர் எனவும் அந்த புகாரில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெண் சன்னியாசிகளை கைது செய்து பாலியல் ரீதியாக துன்புறுத்தவாதகவும், தன் மீது கடந்த 10 ஆண்டுகளில் 150 பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் நித்யானந்தா தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக