Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 13 டிசம்பர், 2019

பாஸ்போர்ட்டில் மலர்ந்த தாமரை: மத்திய அரசு விளக்கம்!

புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரை மலர் அச்சிடப்பட்ட படம் வெளியிடப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கியுள்ளது.

அண்மையில் விநியோகிக்கப்பட்டு வரும் புதிய பாஸ்போர்ட்டுகளில் தாமரை சின்னம் இடம் பெற்றுள்ளது. இது பாரதிய ஜனதா கட்சியின் சின்னத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாக கூறி, சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பிரச்சனை எழுப்பிய காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன், கேரளாவில் விநியோகிக்கப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் பாஜகவின் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டது குறித்து விளக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், “போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் இடம்பெறும்.

அந்த வகையில் தற்போது தேசிய மலரான தாமரையின் சின்னம் பொறிக்கப்பட்டது. மற்றபடி இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!